Game

வேறலெவலில் கேட்ச் பிடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்த ரெய்னா – வைரலாகும் வீடியோ

Rate this post

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இப்போட்டிக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் விளையாட அழைத்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பென் டன்க் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

அபிமன்யு மிதுன் வீசிய 16 ஓவரில் பென் டன்க் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயற்சி செய்தார். அப்போது பாய்ண்டில் நின்றிருந்த சுரேஷ் ரெய்னா அதை அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

அந்த கேட்ச் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Comment here