கதை

ஶ்ரீவிஷ்ணு புராணம். ஶ்ரீமஹாலக்ஷ்மி இந்திரனுக்கு தரிசனம்

Rate this post

ஶ்ரீபராசர மஹரிஷி வாக்கு :

மைத்ரேயரே

இவ்வாறு இந்திரன் துதிக்கவே, எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஶ்ரீதேவி திருவுள்ளம் உகந்து இந்திரனுக்கு ப்ரத்யக்ஷமாய் காட்சி கொடுத்து தேவர்கள் அனைவரும் கேட்கும்படியாக இவ்வாறு கூறலானாள் :

ஶ்ரீலக்ஷ்மிதேவி வாக்கு :

இந்திரனே !

நீ செய்த ஸ்தோத்திரததினால் மிகவும் மகிழ்ந்தேன்.

உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.

உனக்கு வரம் தரவேண்டும் என்றுதான் இப்பொழுது இங்கு வந்துள்ளேன்.

இந்திரன் கேட்கிறான் :

தாயே

தாங்கள் வரம் தர விரும்பினால்,

நானும் வரம் பெறுவதற்குத் தகுதி உடையவன் என்றால்,

தாங்கள் இந்த மூன்று உலகங்களையும் என்றும் எப்பொழுதுமே விடாமல் இருக்க வேண்டும் என்பதே எனது உயர்ந்த வேண்டுகோள் ஆகும்.

திருப்பாற்கடலில் உதித்தவளே !

இரண்டாவது வரமாக நான் வேண்டுவது இந்த ஸ்தோத்திரத்தினால் துதிக்கும் ஒருவனை தாங்கள் கைவிடாமல் என்றென்றும் ரக்ஷித்து அருளவும் வேண்டுகிறேன்.

ஶ்ரீமஹாலக்ஷ்மி வாக்கு :

தேவர்களில் சிறந்த இந்திரனே !

நீ விரும்பியபடியே நீ ஆட்சி புரிகிற மூன்று உலகங்களையும் விட்டு ஒருபோதும் நான் நீங்கமாட்டேன்.

நீ செய்த இந்த ஸ்தோத்திரத்திற்கு மகிழ்ந்து நான் இந்த வரத்தை உனக்கு அளித்தேன்.

எவனொருவன் தினமும் காலையும் மாலையும் இந்த ஸ்தோத்திரத்தினால் என்னைத் துதிக்கிறானோ,

அவனை ஒரு நாளும் விடாமல்,

அசட்டை செய்யாமல் கடாக்ஷித்து அருள்கிறேன்.

ஶ்ரீபராசர மஹரிஷி வாக்கு :

மைத்ரேயரே !

இவ்வாறு முன்பொரு காலத்தில் கருணையே வடிவெடுத்த ஶ்ரீமஹாலக்ஷ்மி இந்திரனின் ஸ்தோத்திர வடிவான பூஜையினால் மகிழ்ந்து இந்த இரண்டு வரங்களைத் தந்தாள்.

ஶ்ரீமஹாலக்ஷ்மியின் திருவவதார வைபவம் & பலஸ்ருதி தொடரும்.

ஆதாரம் :
ஶ்ரீவிஷ்ணு புராணம்,
அம்சம்—1,
அத்தியாயம்—9,
ஸ்லோகம்—134 to 140.
பக்கம்—59 & 60.
Gita press

Comment here