India

ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சி – இன்று பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்…!

Rate this post

ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி ஜப்பான் செல்ல உள்ளார்.

ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது, டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு வரும் 12-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டு அரசு சார்பில் வரும் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்ல உள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Comment here