பதினோராம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தற்கொலை.

பரிட்சை சரியாக எழுதாதால் தாய் நாகலட்சுமி கண்டித்ததால் விபரீதம்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன் பட்டியில் வாழ்ந்து வருபவர் வள்ளி ராஜன் இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும் சண்முகப்பிரியா என்ற மகளும் மற்றும் மகனும் உள்ளனர்.

சண்முகப்பிரியா சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன் தினம் தேர்வுகள் நிறைவு பெற்ற நிலையில் எஸ் எஸ் காலனியில் உள்ள பெரியம்மா ரேணுகாதேவி வீட்டில் விடுமுறைக்காக இருந்து வந்துள்ளார்.

அப்பொழுது அம்மா நாகலட்சுமி பரீட்சையில் மார்க் குறைவாக வரக்கூடாது எனவும் மார்க் குறைந்து வரும் பட்சத்தில் மாடு மேய்க்க அனுப்பி விடுவேன். என்று கூறியதாக தெரிகிறது இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா பெரியம்மா வீட்டிலேயே சேலையில் தூக்கிட்டு இறந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து வந்த பள்ளி ராஜன் அறிந்து வந்த அம்மா நாகலட்சுமி மற்றும் அண்ணன் ஆகியோர் கதறி துடித்தனர்.

எஸ் எஸ் காலனி ரேணுகா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சண்முக பிரியாவின் உடலை சிங்கம்புணரி போலீசார் பினக்கூறாய்விற்காக சிங்கம்புணரி வட்டார அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலைக்காக செய்த வெளிநாடு சென்று இருந்த வள்ளி ராஜன் தகவல் அறிந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டுள்ளார்

பள்ளி மாணவி பரிட்சை எழுதி முடித்து வீட்டில் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்

சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் குழுமிய உறவினர்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்து புலம்பியது பார்ப்பவர்களின் நெஞ்சத்தை உருக்கியது,