Tamilnadu

12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் – தீயாய் பரவும் வீடியோ

Rate this post

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது,

இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது,

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

Comment here