Tamilnadu

2ம் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

Rate this post

2ம் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் என்ற இடத்தில் அமைய உள்ளது.

இதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாக தகவல் வெளியானது.

மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

இதனையடுத்து மக்கள் அமைதியான முறையில் 53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசம்பாவிதச் சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்க, ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comment here