India

2வது திருமணம் செய்த கணவர் – மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த மனைவி

Rate this post

2வது திருமணம் செய்த கணவரை மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து மனைவி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம், கவர்ணபள்ளியை சேர்ந்த அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அகிலாவிடம் 20 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கச் சொல்லி ஸ்ரீகாந்த் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை வரவே, மனைவியை பிரிந்து சென்ற ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த அகிலா, தனது இல்லத்திற்கு ஸ்ரீகாந்தை அழைத்து வந்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார். மேலும், ஆத்திரம் தீராத அவர், செருப்பு மாலையை ஸ்ரீகாந்திற்கு அணிவித்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்தை மீட்டு, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment here