Game

3-வது கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி – தீவிரம் காட்டும் இந்திய வீரர்கள்…!

Rate this post

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இந்தியாவிடம் தோற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி கிடையாது. ஒரு சில மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Comment here