பொது

எண்ணங்கள்..

Rate this post

நம்முடைய பல பிரச்சனைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதாவது செயலில் அடிபட்டு அல்லது வேறு அனுபவத்தில் தெரிந்த பிறகு அடடா! இது தெரியாம போச்சே! என்று நினைப்போம்.

எண்ணங்கள்..

“எண்ணம் போல வாழ்வு” “இதுவும் கடந்து போகும்!” என்பவை முன்னோர் வாக்கு.

“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பது புத்தரின் கூற்று.

“எதிர்மறை எண்ணங்கள்” (Negative thoughts)..

நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் நம்மை முன்னேற்றம் அடையச் செய்யவே செய்யாது. அனைத்தையும் தோல்வியாக்கி விடும். நம் மனதை சோர்வடையச் செய்து விடும்.

கடுமையான மன உளைச்சலில் தள்ளி நம் நிம்மதியை முற்றிலும் குலைத்து விடும். மகிழ்ச்சி என்பதையே தொலைத்து எப்போதுமே ஒரு சோக மனநிலையில் இருப்போம்.

முதலில் எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். “முடியாது, கிடைக்காது, நடக்காது” போன்ற வார்த்தைகளை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

பயப்படுவதால் பிரச்சனை தீராது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும். எனவே, “என்ன நடந்து விடும்!” என்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியாக, உற்சாகமாக, நல்ல கருத்துக்களை பேசுபவர்கள், நல்ல ஆலோசனைகளைக் கூறுபவர்களை நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்.

என்னுடைய பெரும்பாலான பதிவுகளில் எதிர்மறை எண்ணங்களை நான் பதிவு செய்வதில்லை..

ஏனென்றால்

அவ்வாறு எழுதுவது கூட, படிக்கும் யாரையாவது மனதளவில் தைரியத்தை இழக்க வைக்கும்.

எனவே, நேர்மறையாகச் சிந்தியுங்கள், நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்,

எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்,

எதையும் சமாளிக்கலாம் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.

Comment here