கதை

வசியம் செய்து நமக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியமா?

Rate this post

அப்சரஸ் தேவதைகள் என்ற இந்த தலைப்பில்
ஒரு ஆழமான தேடல் பயணத்தை தொடர்ந்து இந்த அப்சரஸ் தேவதைகள் யார்…?
இவர்கள் உண்மையில் இன்றும் இருக்கின்றார்களா…?
அவர்களை வசியம் செய்து நமக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியமா?
என்ற கேள்விக்கான விடையை தேடுவோம் வாங்க.

அப்சரஸ் தேவதைகளின் பிறப்பிடம் எங்கே தொடங்கியது என்று ஆராயும் போது,
அசுரர்களும் தேவர்களும் தேவமிர்தம் கிடைக்க பாற்கடலை கடையும் போது கடலில் இருந்து தோன்றியவர்கள் என்று சமுத்திர மாந்தன் புராண கதை சொல்கிறது.
சரி முதலில் “அப்சரஸ்”என்றால் என்ன பொருள் என்பதை ஆராய்வோம்
அப்ஜம்’ என்றால் தாமரை என்று பொருள்,
‘சரஸ்’ என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் தருகிறது.

“சரஸ்”என்றால் நீர் நிலை சரி;
உப்பு நீரில் தாமரை மலருமா?
ஏரி, குளம், குட்டைகளில் தானே தாமரை வளரும்?
எனவே இந்த “அப்சரஸ்” தேவதைகள் கடல் அல்லாத ஏரி, குளம், குட்டைகள் போன்ற இடங்களில் இருந்து தானே தோன்றினார்கள் என்று புராணகதையில் சொல்லிருக்க வேண்டும்?
அப்படி இல்லாமல் ஏன் தேவர்களும் அசுரர்களுக்கும் பாற்கடலை கடையும் போது கடலில் இருந்து தோன்றியதாக கதை சொன்னாரகள்…?
ஒருவேளை காலம் ஏதோ ஒன்றை வரலாற்றுப்பிழை செய்துள்ளதா…?

நாம் இந்த “அப்சரஸ்”தேவதைகளின் வரலாற்றை மீட்க வேண்டுமெனில் முதலில் “சமுத்திரம் மாந்தன்” புராணகதையை கிளற வேண்டும் அப்போது தான்
உண்மையான “அப்சரஸ்” தேவதைகள் யார் என்ற உண்மையை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்திரனை தலைவனாக கொண்ட தேவர்கள் தனது சக்திகளை இழந்து
அசுரர்களிடம் தோற்றுப்போகிறார்கள்
அப்போது மகாவிஷ்ணு விடம் சென்று அசுரர்களை வெற்றிகொள்ள உதவும் படி தேவர்கள் கோரிக்கை விடுகிறார்கள்

(இந்திரன் இராவணனின் மகன் என்பதை நினைவில் கொள்க)

விஷ்ணு ஒரு யோசனை சொல்கிறார்
அதாவது பாற்கடலை கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் இழந்த சக்தி மீண்டும் கிடைக்கும்
அப்போது நாம் அசுரர்களை வென்றுவிடலாம் என்பது தான் அந்த யோசனை.

அதான் படி தேவர்கள் சம்மதித்து பாற்கடலை கடைய தயாராகிறார்கள்
பாற்கடலை கடைவது சிரமம் என்பதால் விஷ்ணு மேலும் ஒரு யோசனை கூறுகிறார்
“பாற்கடலை நம்மால் மட்டும் கடைய முடியாது கூட உதவிக்கு அசுரர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தருவதாக கூறி பாற்கடலை கடைந்து அமிர்தத்தை பிரித்து எடுப்போம்
பிறகு அதை அசுரர்களுக்கு கிடைக்காத படி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தேவர்களை தேற்றி அனுப்புகிறார்

(இங்கே ஒரு விடயத்தை கவனியுங்கள் தேவர்கள் இரு பிரிந்து வெவ்வேறு திசையில் நின்று பாற்கடலை கடைய முடியும் ஆனால் இங்கே தேவர்களும் அசுரர்களும் எதிர் எதிர் திசையில் இருந்து பாற்கடலை கடைய வேண்டிய அவசியம் என்ன?)

காரணம் இருக்கு😀

விஷ்ணு சொன்னதைப்போல அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் போது முதலில் வந்தது ஆலகால விஷம்.
அதை சிவா பொருமான் உலக மக்கள் மற்றும் ஜீவராசிகளை காக்க தான் கைகளால் அள்ளி எடுத்து குடிக்கிறார் அப்போது அன்னை பார்வதி தேவி தோன்றி சிவனின் தொண்டை பகுதியை இருக்கு பிடிக்க விஷம் தொண்டையில் நின்று விடுகிறது.
அதனால் சிவன் நீலதொண்டையை உடையவன் என்ற பொருளில் நீலகண்டன் என்று அழைக்க படுவதாக புராண கதை.

(இதற்கு பின்னணி நிச்சயம் வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும்)

பிறகு மீதும் பாற்கடலை கடைய தன்வந்திரி என்பவர்
அமிர்த குடத்தோடு கடலிலிருந்து வெளிப்படுகிறார் அதை அசுரர்கள் தட்டிப்பறித்து கொள்ள,
தேவர்கள் கலக்கம் கொண்டார்களாம்
இத்தனை கண்ட மஹாவிஷ்ணு மோகினி அவதாரம்.
கவனியுங்கள் *மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி

( இது சிந்திக்க வேண்டிய இடம்)

ஏமாற்றி அமிர்த பானையை கைப்பற்றி தேவர்களுக்கு மட்டும் பங்கிட்டு கொடுக்கிறார் மஹாவிஷ்ணு.
இங்கே அசுரர்கள் என்பது சாதாரண மன்னர்கள் என்றும்
தேவர்கள் என்பது குண்டலினி எழுப்பிய இராவணன் வழி இந்திரானை தலைவனாக கொண்ட மன்னர்கள் என்பதை பொருள் கொள்ள வேண்டும்.

உலகில் முதல் குண்டலினி யோகத்தை அறிந்தவர் சிவன்
அதான் அடையாளமாக அவருக்கு மூன்றாவது கண் இருப்பதையும்
சிவன் குண்டலினியை எழுப்பியதற்கு ஆதார அடையாளமாக “வாசுகி”
என்ற பண்பு அவர் கழுத்தில் ஊர்ந்துக்கொண்டு இருப்பதையும் கவனியுங்கள்

உண்மையிலே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்களா?
புராணம் சொல்வதை போல
பாற்கடலை கடைந்திருந்தது உண்மை என்றால் தேவர்கள் மட்டும் இரு வேறு திசையில் நின்று மந்தாரை மலையில் வாசுகி என்ற பாம்பை சுற்றி பிடித்து இழுத்து கடைந்து இருக்கலாமே
முப்பத்து முக்கோடி தேவர்களால் முடியாததா விரல் விட்டு எண்ணக்கூடிய அசுரர்களால் முடியப்போகுது…?
என்ற கேள்வி நமக்குள் இருக்கத்தான் செய்கிறது.

Comment here