India

63 ஸ்பூன்களை மிழுங்கிய நபர் – அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

4/5 - (2 votes)

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் 32 வயது நபரின் வயிற்றிலிருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் 32 வயது நபரின் வயிற்றிலிருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து நோயாளியிடம் மருத்துவர் டாக்டர் ராகேஷ கூறுகையில், நீங்கள் ஸ்பூன் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, ​​அவர் ஒரு வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினார்.

ஒரு சாதாரண நபரால் ஒரு கரண்டியை சாப்பிட முடியாது. ஆகவே இவர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

Comment here