காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தி வரப்பட்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனம் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் காரக்காலில் இருந்து மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த ஜெல் என்கின்ற ஜெல்சன் காரைக்காலிருந்து இருச்சக்கர வாகனத்தில் மது கடத்தலில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 90 ml அளவுக் கொண்ட 750 வெளிமாநில மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி விஷ சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை நாகை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பார்வையிட்டார். தொடர்ந்து இது போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுத்தார்.