ஆதரவற்ற நிலையில் அம்மா பூங்கா.உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்ட கூடம்.சமூக விரோதிகளின் உல்லாசத்திற்காக மாறிய அவலம்.

தருமபுரி மாவட்டம்: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்ஜல்நத்தம் ஊராட்சியில் 2018- 19ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா திறக்கப்பட்டது.
பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சில நாட்கள் பராமரிக்கப்பட்டது. பின், அதை சரிவர பராமரிப்பு மேற்கொள்ளாமல் அப்படியே போடப்பட்டது. தற்போது, ‘அம்மா’ பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ‘குடி’மகன்கள் இங்கு மது அருந்திவிட்டு, டம்ளர், பாட்டில், தின்பண்டங்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர்.

_______________________________________________________________________________

உயர்நீதி மன்றம் மதுரை கிளை:

கால்நடை துறையில், கால்நடை ஆய்வாளர் பணிக்கு நேரடி முறையில் நபர்களை நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கு.

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்காக, துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்து வழங்கப்படும் பயிற்சியை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

இது குறித்து, கால்நடை துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார்.

_______________________________________________________________________________

கரூர் மாவட்டம்: குளித்தலை அருகே கே பேட்டை ஊராட்சிக்குட்பட்ட திம்மாச்சிபுரம் பகுதியில் தெருக்களில் இருந்த நான்கு வயது குழந்தை முதல் 55 வயது வரை உள்ள 15க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறி நாய் ஒவ்வொருவராக கடித்துக் கொண்டே சென்றுள்ளது, அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

_______________________________________________________________________________

திருவெறும்பூர் அருகே தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதால் ஆட்டோ டிரைவர் படுகாயம்:

துவாக்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் தனியார் பேருந்து தஞ்சாவூர் மெயின் ரோட்டில் அம்மன் நகர் அருகே ஓரமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி ஆட்டோ நிலை தடுமாறி ஆற்றில் இறங்கினது இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ரஜினி ( 42) பங்காரு அடிகளார் நகரைச் சார்ந்தவர் இவரை பொதுமக்கள் உதவியுடன் துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

_______________________________________________________________________________

வள்ளியூர் அருகே தேரைகுளத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் வள்ளியூர் – திருச்செந்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லை மாவட்டம்: தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தேரைகுளம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு வார காலமாக தெரு நல்லிகளில் குடிநீர் வராமல் உள்ளது.

கிராம மக்கள் தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவரிடம் இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தேரைகுளம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வள்ளியூர்- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வள்ளியூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

_______________________________________________________________________________

வள்ளியூர் அருகே தேரைகுளத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் வள்ளியூர் – திருச்செந்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தேரைகுளம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு வார காலமாக தெரு நல்லிகளில் குடிநீர் வராமல் உள்ளது.

கிராம மக்கள் தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவரிடம் இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தேரைகுளம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வள்ளியூர்- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வள்ளியூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

_______________________________________________________________________________

ஜெயங்கொண்டம் – நியாய விலை கடை சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி.

அரியலூர் மாவட்டம்: ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு ஆலோசனை‌ கூட்டத்தில் பங்கேற்ற‌ தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேட்டி

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கியதை கண்டித்து தமிழக முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப செல்ல கூறினார்.

_______________________________________________________________________________

இந்தியாவின் மின் தேவை 9.5% அதிகரிப்பு:

நடப்பாண்டில் இந்தியாவின் மின் தேவை 9.5% அதிகரித்து 1,504 பில்லியன் யூனிட்களாக உயர்வடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் மின் தேவை 1,374 பில்லியன் யூனிட்களாக இருந்தது. உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கையால் மின் தேவை அதிகரித்துள்ளதாகவும், போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

_______________________________________________________________________________

தூத்துக்குடி: நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போனஸ் வழங்கப்படாதது மற்றும் துறைமுகம் தனியார் மயம் ஆகியவற்றை கண்டித்து விரைவில் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய நீர்வளி போக்குவரத்து சம்மேளனம் (சிஐடியு) பொது செயலாளர் நரேந்திர ராவ் பேட்டி!

_______________________________________________________________________________

கெங்கவல்லி அருகே கார் பொழுது நீக்கும் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கார் தீ பிடிப்பு அங்குள்ள பொதுமக்களும் பட்டறை ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு:

சேலம் மாவட்டம்: செங்கவல்லி அருகே தம்மம்பட்டி உடையார் பாளையம் பகுதியில் அரசு மகளிர் பள்ளி எதிரில் அருள் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா கார் பழுது நீக்கும் பட்டறை உள்ளது இந்நிலையில் மாருதி கார் ஒன்று சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது அந்த காரின் போல்ட் ஒன்று கழட்ட முடியாத காரணத்தால் அதை கேஸ் வெல்டிங் வைத்து கழட்ட முற்பட்ட போது அதில் ஏற்பட்ட தீப்பொறி திடீரென அருகில் இருந்த காரின் கேஸ் மீது விழுந்ததில் தீப்பற்றியது பின்னர் தீ மளமளவென எறிய தொடங்கிய நிலையில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தனர் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத்துறை அண்ணனுக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் தீயணைப்பு துறை வாகனம் வராததால் அப்பகுதியில் உள்ள மக்களும் அந்த பட்டறையில் வேலை செய்யும் ஊழியர்களும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தண்ணீரை ஊற்றி தீயை அணித்து கட்டுக்கள் கொண்டு வந்தனர், மேலும் தீ பரவாமலும் கட்டுப்படுத்தினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே தீயணைப்புத் துறை காவல் துறையினர் வராததால் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது, தனியாருக்கு சொந்தமான கார் பட்டறையில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

_______________________________________________________________________________

அரியலூர் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுமார் ரூபாய் 62 லட்சம் மதிப்பிலான மருந்துகள் வழங்கியதற்கான தொகையை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

அரியலூர் மாவட்டம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் மற்றும் மருந்துகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் எங்களது நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. அதற்கான தொகை சுமார் 65 லட்சம் ரூபாய் இதுவரை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல் பல நிறுவனங்களுக்கு மருந்துகள் வழங்கியதற்கான தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மருந்துகளை வழங்கினோம்.

இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மருத்துவ நிர்வாகம் முறையான பதிலும் அளிக்கவில்லை பணமும் வழங்கவில்லை. பொதுமக்கள் உயிர் காக்கும் மருந்துகளை வழங்கினோம் ஆனால் இன்று எங்கள் உயிர் கேள்விக்குறியாக உள்ளது என கூறினர். எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

_______________________________________________________________________________

தமிழகத்தில் முதல்முறையாக 40 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா: மலைவாழ் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பழங்குடியினர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தமிழக அரசு கருணை உள்ளத்தோடு நிரப்ப வேண்டும் என கோரிக்கை…

அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழாவானது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1975-ம் ஆண்டு முள்ளுகுறிச்சி கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட நிலையில் தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் கல்வி நலனுக்காக துவங்கப்பட்ட மிகவும் பழமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று.

இந்தப் பள்ளி வரலாற்றில் மலைவாழ் மக்களுக்கு கல்வி கண் கொடுத்த மூன்றாவது தெய்வமான குருவை சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1975 முதல் 1995 வரை கல்வி பயின்ற மலைவாழ் மாணவர்கள் ஒன்று கூடி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கேடயங்கள் சான்றிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர்.

இந்தப் பள்ளி துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இங்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா என்பது நடைபெறவில்லை. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம் என மகிழ்ச்சி பொங்க தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் குடும்பத்தோடு உணவு அருந்தி மகிழ்ந்ததோடு முள்ளுகுறிச்சி கிராமம் வழியாக ஆசிரியர்களை கௌரவித்து ஊர்வலமாக அழைத்து வந்து மகிழ்ந்தனர். இந்த ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் கடந்த ஐந்து மாதங்களாக செய்து வந்தனர்.

_______________________________________________________________________________

திண்டுக்கல் மாவட்டம்: நிலக்கோட்டை அருகே கொடைரோட்டில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தம் விவசாய பாரம்பரியத்தை மறவாமல் தன் வீட்டு காதணிவிழா விஷேசத்தில் விருந்தினர்களுக்கு தாம்புலத்திற்கு பதிலாக இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 2500 தென்னங்கன்றுகள் வழங்கிய தொழிலதிபர்….

கொடைரோட்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி . விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறிய அளவிலான பெட்டிக்கடையில் துவங்கி தொடர்ந்து தனது கடின உழைப்பால் இன்று தமிழகம் முழுவதும் சுமார் 15-க்கும் மேற்பட்ட பேக்கரி கடைகளை வைத்துள்ளார். சுமார் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தருமளவிற்கு முன்னேறினாலும் கொடைரோட்டில் நடந்த தனது மகன் தயாநிதி காதணி விழா நிகழ்ச்சியை பிரம்மாண்டளவில் நடத்தினார்,அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தடால்புடால் சைவ, அசைவ விருந்துகள் ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் என்றும் தான் ஒரு விவசாயி என்பதையும், விவசாயத்தின் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்து விதமாக, தான் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதாலும், எதிர்கால சமூகத்திற்கு விவசாயம் மிகவும் முக்கியம் என்பதை விளக்கும் வகையில் தனது வீட்டு விஷேசத்திற்கு வந்த விருந்தினர்கள் உட்பட அனைத்து பொது மக்களுக்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் சுமார் 2 இலட்ச ரூபாய் செலவில், நூறு ரூபாய் மதிப்பிலான 2500 தென்னங்கற்றுகள் வழங்கினார்.விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட கருப்பசாமியை வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் பாராட்டி சென்றனர்.

_______________________________________________________________________________

கோவை: காந்திமாநகர் பகுதியில் உருட்டு கட்டைகளுடன் குடியிருப்பு பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள்! வெளியாகி உள்ள சிசிடிவி காட்சி!

கோவை காந்திமாநகர் பகுதியில் சமீபமாக இளைஞர்கள் கத்தி உருட்டு கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரகலையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கோவை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக போதைப் மாத்திரை, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்கள் கத்தி உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர்.

இப்படி நேற்று முன்தினம் காந்திமாநகர் பகுதியில் குடியிருப்பில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் இரண்டு குழுக்களாக உருட்டு கட்டை, டியூப் லைட் போன்ற ஆயுதங்களுடன் ஒன்று கூடினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் போலீசார் இரண்டு குழுக்களாக வந்தவர்களை விரட்டினர். இந்த நிலையில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ஒன்று கூடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

_______________________________________________________________________________

30 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை – கிரேன் மூலம் மீட்ட தீயணைப்பு வீரீர்கள்:

கிருஷ்ணகிரி மாவட்டம்: போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவர் இரண்டு எருமை மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது விவசாய நிலத்தில் எருமை மாட்டை மேய்ச்சலுக்கு கழற்றிவிட்டுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது விவசாய நிலத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு அம்மா அம்மா என தொடர்ந்து கூச்சலிட்டுள்ளது. சப்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்த சரவணன், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் எருமைமாட்டை கிணற்றிலிருந்து தூக்க முடியவில்லை. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியோடு எருமைமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவர் இரண்டு எருமை மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது விவசாய நிலத்தில் எருமை மாட்டை மேய்ச்சலுக்கு கழற்றிவிட்டுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது விவசாய நிலத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு அம்மா அம்மா என தொடர்ந்து கூச்சலிட்டுள்ளது. சப்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்த சரவணன், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் எருமைமாட்டை கிணற்றிலிருந்து தூக்க முடியவில்லை. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியோடு எருமைமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

_______________________________________________________________________________

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது:

களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின் யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 17ம் தேதி தொடங்கி, 19ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 32 இடங்களில் செல்போன் ஆப் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகள் எச்சங்களை சேகரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட 3 முறைகளில் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு இன்று மாலை களக்காடு தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.அதனைதொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழுவினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேகரிக்கப்படும் புள்ளிவிபரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார். முகாமில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

_______________________________________________________________________________

தாராபுரம்: அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட முயன்ற ஒருவர் கைது அவரிடம் இருந்து 2, லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம்: தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை இட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய உறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

_______________________________________________________________________________

போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகளின் அவல நிலை:

கிருஷ்ணகிரி மாவட்டம்: போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான புலியூர், அரசம்பட்டி, அகரம், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது காய்த்து குலுங்குகின்றன. இதனால் புலியூர் தக்காளி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது இந்த விலை சரிவால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.

இதுகுறித்து வண்டிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், “வரத்து அதிகரிப்பால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காலி ரூ.5-க்கு வாங்கி, வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர். பறிக்கும் கூலிக்கு கூட பணம் கிடைக்காத காரணத்தால் நிலங்களிலேயே பறிக்காமல் விட்டுள்ளோம் என தெரிவித்தார்.

_______________________________________________________________________________

அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி சிஐடியு சார்பில் ராமநாதபுரம் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்:

ராமநாதபுரம் மாவட்டம்: திருப்புல்லாணி மற்றும் பாம்பன் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சட்டவிரோத டாஸ்மாக் மதுபான கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ராமநாதபுரம் மண்டல டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் பள்ளி மாணவர்களின் தங்கும் விடுதி, புகழ்பெற்ற ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் தீர்த்தம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு அருகில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது என்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், வயல்வெளியிலும், பள்ளி மற்றும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கூடாது என்ற விதியை மீறி அமைந்துள்ள திருப்புல்லாணி டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும், அதேபோல புனித நகரமாகிய ராமேஸ்வரம் தீவுக்குள் டாஸ்மாக் மதுபான கடை அமையக்கூடாது என்ற விதியை மீறி பாம்பனில் டாஸ்மாக் மதுபான கடை அமைத்திருப்பதாகவும் எனவே திருப்புல்லாணி மற்றும் பாம்பனில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் டாஸ்மாக் மண்டல மேலாளர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அங்கே செயல்பட அனுமதித்திருப்பதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி போராட்டத்திற்கு தலைமை வைத்தார். ஏராளமான ஒரு கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

_______________________________________________________________________________