தமிழ் சினிமா பிரபலம் நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நல குறைவால் திடீரென மரணமடைந்துள்ளது சினிமா பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது மயில்சாமி அவர்களுக்கு 57 வயது.

சென்னையில் தனது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது அது மட்டுமில்லாமல் மாரடைப்பு திடீர் என ஏற்பட்டதால் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இந்த நிலையில் ரமேஷ் கண்ணா மனோபாலா ஆகியோர்கள் மயில்சாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தவர் இவர் நடிகர், காமெடியன், சமூக சேவகர் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் மேலும் மயில்சாமி 1985 ஆம் ஆண்டு கன்னி ராசி என்ற திரைப்படத்தில் டெலிவரி பாய்யாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாம 1988 ஆம் ஆண்டு தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பணக்காரன், உழைப்பாளி  ஆகிய  திரைப்படங்களில் நடித்திருந்தார் அதேபோல் கமலஹாசன் அவர்களுடன் வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து சின்ன கவுண்டர் திரைப்படத்திலும் சத்யராஜ் அவர்களுடன் இணைந்து வால்டர் வெற்றிவேல் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் அஜித் அவர்களுடன் இணைந்து ஆசை, வேதாளம், வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதேபோல் விஜயுடன் இணைந்து கில்லி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் லெஜெண்ட் சரவணன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம்  சட்டசபைத் தொகுதியில் சுழற்ச்சியாக நின்று வெற்றி கண்டவர் இவர் அதிக சண்முக ஆர்வம் கொண்டவர் கொரோனா காலகட்டத்தில் விருகம்பாக்கத்தில் பல நலத்திட்டங்களை செய்துள்ளார் அதனால் தான் மக்கள் இவரை மறக்காமல் இருக்கிறார்கள்.

இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வந்தார். அது மட்டும் இல்லாமல் லொள்ளு சபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் மேலும் அசத்தப்போவது யாரு, சிரிப்போ சிரிப்ப ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தவர் வடிவேலு, விவேக் ஆகியவருடன் இணைந்து நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சில நடிகர்களுக்கு குரலும் கொடுத்துள்ளார் அந்த வகையில் வடிவேலு, மணிவண்ணன் ஆகியோருக்கு குரல் கொடுத்திருந்தார்.

இப்படி சினிமாவில் பேரும் புகழும் பெற்று நிலைத்து நின்ற மயில்சாமி திடீரென மரணமடைந்தது சினிமா பிரபலங்களிடையே மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மயில்சாமி மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் – தமிழிசை செளந்தரராஜன்.

சினிமா வாய்ப்பு தேடிய காலத்தில் இருந்து மயில்சாமி அண்ணனை தெரியும். ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நிறைய பேருக்கு அண்ணன் உதவி செஞ்சிருக்காரு. மிகப்பெரிய இழப்பு.நடிகர் யோகி பாபு உருக்கம்.

அண்ணனோட மறைவை ஜீரணிக்கவே முடியல- மயில்சாமி மறைவுக்கு சூரி இரங்கல்.

மழை, புயல் வந்தபோதெல்லாம் படகு எடுத்துட்டு உதவி பண்ண கிளம்பிடுவாரு. பணம் செலவாகுதுனு சொன்னா, ‘என்னத்த கொண்டு வந்தோம், என்ன கொண்டு போறோம்’னு கேப்பாரு. திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறந்துட்டே இருக்காங்க. வேதனையா இருக்கு. –நடிகர் மனோ பாலா உருக்கம்.

“பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த மயில்சாமி, தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

“அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

“ஏதாச்சும் ஒன்னுனா எனக்கு தான் கால் பண்ணுவாரு” -மனம் உருகிய நடிகர் ரமேஷ் கண்ணா.

“அவர் இருந்தாலே ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்கும்” – தேம்பி அழுத கஞ்சா கருப்பு.

தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால், கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த சகோதரர் மயில்சாமி – சீமான் இரங்கல்.

மயில்சாமியின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. நடிகர் என்பதை தாண்டி, மிகவும் நல்ல மனிதர் மயில்சாமி.எப்போதும் பொதுநலனுடன் பேசக்கூடியவர் மயில்சாமி – அமைச்சர் உதயநிதி.

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு அஞ்சலி. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் அஞ்சலி.

எம்.ஜி.ஆரின் புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொன்னவர் நடிகர் மயில்சாமி.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.ட்விட்டரில் இரங்கல்.

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

‘மன்னிப்பு கேட்க நினைச்சேன்.. ஆனால் கடைசி வரை முடியல’.. மயில்சாமி மறைவால் கலங்கிய ரஜினி. “மயில்சாமியின் கடைசி ஆசையை நான் கட்டாயமாக நிறைவேற்றுவேன்”.மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் -நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.

எம்.ஜி.ஆர் பாடல் ஒலிக்க மயில்சாமியின் உடல் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.