சங்ககால பாடல்களை மாணவ மாணவிகள் மறந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியின் புதிய முயற்சியில் பிம்பம் வாயிலாக பார்த்து படிக்கும் வகையில் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட ஒன்பது சங்க இலக்கிய பாடல்களை வளமிருந்து இடமாக எழுதி சாதணை.
தருமபுரி நகரப் பகுதியில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர் சத்தியவாணி வயது (17) இவரது தந்தை லாரி ஓட்டுனராகவும் தாயார் டைய்லராகவும் உள்ளனர். இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறையின் போது பொழுதை பயனுள்ள வகையில் போக்க என்ன செய்யலாம் என ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அதற்கு அவர் திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கிய பாடல்களை படிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதையே வித்தியாசமாக செய்யலாமே என நினைத்த சத்தியவாணி திருக்குறளை வளம் இருந்து இடமாக எழுதலாம் என்ற ஆர்வத்தில் எழுதும் முயற்சியில் இறங்கி. இதனை அடுத்து மூன்று நாட்களில் 1330 திருக்குறள்களையும் எழுதி முடித்தார்.பிறகு சத்தியவாணி தொடர்ந்து சங்க கால நூல்களான நாலடியாரில் உள்ள 400 பாடல்களை இரண்டு நாட்களில் எழுதி முடித்துள்ளார். இதனால் மேலும் ஆர்வம் அடைந்த சத்தியவாணி மூதுறையில் 30 பாடல்கள் கொன்றை வேந்தன் 91 பாடல்கள், ஆத்திச்சூடி 109 பாடல்கள், கார் நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நல்வழியில் 40 பாடல்கள் என அனைத்து பாடல்களையும் வளம் இருந்து இடமாக எழுதி சாதனை படைத்துள்ளார். மாணவியின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் சக மாணவிகள் பாராட்டி வருகின்றனர். இது குறித்து மாணவி சத்தியவாணி கூறிய போது:
எனது சொந்த ஊர் மணியம்பாடி நான் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன் தமிழ் மேல் உள்ள பற்று காரணமாகவும் சங்க இலக்கிய நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது கொன்றைவேந்தன் ஆத்திச்சூடி திருக்குறள் நாலடியார் கார் நாற்பது போன்ற நூல்களை கண்ணாடி வழியாக பார்த்தால் படிப்பதற்கு நேராக தெரியும்படி கோர்வையாக எழுதியுள்ளேன் கோடை விடுமுறையில் நாட்களை எவ்வாறு கழிப்பது என்று என் ஆசிரியர்களிடம் கேட்டபோது திருக்குறள் நாலடியார் உள்ளிட்ட நூல்களை படிக்கச் சொன்னார்கள் அதை நான் எழுதி பார்த்த போது இதையே ஏன் தலைகீழாக எழுதி பழகி அடுத்தவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் அடிப்படையில் இதை வளம் இருந்து இடமாக எழுதி உள்ளேன் இன்றைய காலகட்டத்தில் சங்க இலக்கிய நூல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. யாரும் படிப்பதில்லை இவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இதை நான் எழுதியுள்ளேன் அதேபோல் சங்ககால வட்ட எழுத்துக்களில் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன் அனைத்து மொழிகளிலும் எழுத முடிவு செய்துள்ளேன் அனைத்து ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தி பாராட்டினார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave A Comment