புதுச்சேரி மாநில அந்தஸ்த்து தர வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வீட்டிற்கு வந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

புதுச்சேரியில் அதிமுக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர ஒன்றிய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தபட்டிருந்த 2 ஆட்டோக்களை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.