செய்யாறு பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை எட்டு மணி நேர சோதனையில் கணக்கில் வராத 63.720 ஆயிரம் ரூபாய் பறிமுதல் :

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகம் எண் 2-ல் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் மைதிலி தலைமையில் ஐந்து பேர் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பத்திரப்பதிவுக்காக வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் சோதனை செய்தனர்.

சோதனையில் செய்யாறு மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்களிடம் கணக்கில் வராத 63 .720ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலக பணியாளர்கள் மற்றும் பத்திரப்பதிவாளர் பத்திர எழுத்தாளர் உள்ளிட்டோரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையானது மாலை 3 மணி அளவில் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கதவை மூடப்பட்டு சுமார் எட்டு மணி நேரம் தொடர் சோதனையை செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் மைதிலி பத்திரப்பதிவு செய்ய வந்த சிலரிடமிருந்து கணக்கில் காட்டாத

ரூபாய் 63.720 . ஆயிரத்தை பறிமுதல் செய்ததாகவும் பாத்திர பதிவு அலுவலகத்தில் தொடர் லஞ்ச புகார் எழுந்ததையடுத்து சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்தனர். சோதனையில் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான ஐந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்யாறு பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.