மக்கள் நலனை கருதாமல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே பகஜம் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் K.பிரபாகர் தலைமையில் மக்கள் நாளை கருதாமல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் புதிய மோட்டார் வாகனம் சட்டம் மூலம் அதிக அளவில் மக்கள் பணத்தை அபராதமாக பெறுவதை கண்டித்தும், மின் கட்டண உயர்வு கண்டித்தும், பால் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரை தமிழக போலீசார் கைது செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுதியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் தாஸ் உள்ளிட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்