Incident

இன்றைய முக்கிய செய்திகள்

Rate this post

இன்றைய முக்கிய செய்திகள் ….

பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ₹2,785 கோடி உயர்ந்து ₹10,633 கோடி ஈட்டப்பட்டுள்ளது

வணிக வரித்துறை வருவாய் இந்த ஆண்டு ₹20,529 கோடி உயர்ந்து ₹76,839 கோடி ஈட்டப்பட்டுள்ளது

ஆதாரை இணைத்தால்தான் 100 யூனிட் இலவச மின்சாரமா? – அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தின் நடைமுறை என்ன? – ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் விண்ணில் ஏவப்பட்டது

அதிமுக பொதுக்குழு விரைவில் நடக்கும்; வாய்ப்பு கிடைத்தால் தினகரனை சந்திப்பேன் – பன்னீர்

அதிமுக தலைமையில்தான் எப்போதும் கூட்டணி – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

பிரதமர் மோடி ஆட்சியில் தீவிரவாத செயல்கள் குறைந்துள்ளன – என்.ஐ.ஏ. தலைவர் டிங்கர் குப்தா

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

கூட்டுறவுத் துறை ஊழியர் ஓய்வூதியம் தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐதராபாத்: கஸ்தூரிபாய் அரசு கல்லூரி ஆய்வகத்தில் கேஸ் லீக் ஆனதால் 25 மாணவிகள் மயக்கம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: 2 டாக்டர்களின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிரியா மரணம்: 2 டாக்டர்களுக்கு அரசு பாதுகாப்பு தரும்; வேண்டுமானால் சரணடையுங்கள் – ஐகோர்ட்

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கல்லூரி பேராசிரியர்கள் மேலங்கி அணிந்திடுக – கல்வி நிலையங்களுக்கு உயர் கல்வித்துறை கடிதம்

காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு மார்ச் 15-ல் தேர்வு – டிஎன்பிஎஸ்சி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது

ஆர்டர்லியை பின்பற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை

உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் – பொன்முடி

நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – சென்னை பல்கலைக்கழகம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் 50% இடங்கள் ஒதுக்கீட்டை 10 நாள் நிறுத்த ஐகோர்ட் ஆணை

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் மழையால் கைவிடப்பட்டது

கள்ளர் கல்வி கழக தலைவர் நீக்கம் செல்லும் என உசிலம்பட்டி உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

சென்செக்ஸ் 87 புள்ளி சரிந்து 66,663; நிஃப்டி 36 புள்ளி குறைந்து 18,308 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

கூட்டுறவுத்துறையில் வெளிப்படைத்தன்மையுடன் 6,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன – ஐ.பெரியசாமி

மியான்மரில் சிக்கிய 22 தமிழக இளைஞர்கள் சென்னை வந்தனர் – அமைச்சர் மஸ்தான் வரவேற்பு

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியில் அகற்றிய மீன் சிலை பற்றிய வழக்கு – ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் ஆணை

துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

வழக்கு ஆவணமின்றி வக்கீல் ஆஜராவது, பேட் இன்றி சச்சின் களமிறங்குவதற்கு சமம்-சுப்ரீம் கோர்ட்

வரி செலுத்தும் வணிகர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1.19 லட்சம் உயர்ந்து 6.73 லட்சமாக உள்ளது

இந்திரா காந்தி பிறந்தநாளை ஒட்டி ராகுலின் பாரத் ஜூடோவில் நாளை பெண்கள் மட்டும் பங்கேற்பு

சாவர்கர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தானே போலீஸ் வழக்கு பதிவு

ரூபி மனோகரன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு; தூத்துக்குடி காங். மாவட்ட தலைவர் காமராஜ் விலகல்

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்றாதீர் – சந்திரசூட்டுக்கு ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கம் கடிதம்

ஊழியர்களை இடமாற்ற எதிர்ப்பு: எஸ்பிஐ, ஐஓபி, தனியார் வங்கிகள் தவிர பிற வங்கிகள் நாளை ஸ்டிரைக்

சிறுவாச்சூர் கோயில் பணிக்கு வசூலித்த தொகை: மிலாப் செயலி நிறுவனம் விவரம் தர ஐகோர்ட் ஆணை

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகள் வெளியீடு

79,305 ச.மீ. பரப்பளவில் 9,035 சாலை பள்ளங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன – சென்னை மாநகராட்சி

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தவறான கேள்விக்கு 4 மதிப்பெண் தர உச்சநீதிமன்றம் தடை

உச்சநீதிமன்ற வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என இந்தியில் வாதாடிய வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை

எதன் அடிப்படையில் நபர்களை தேர்வு செய்து கலைமாமணி விருது வழங்குகிறீர்கள்? – ஐகோர்ட்

வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு

திருச்செந்தூர் விரைவு ரயில் வழித்தடத்தில் 4 ரயில் நிலைய நடைமேடைகள் விரிவாக்கம் – ரயில்வே

கோவையில் 3 மாதங்களில் வ.உ.சி. சிலை அமைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்

கரூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தலைமை செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விவசாயிகளுக்கு 1,615 வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் தரப்படும்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கனிமொழி எம்.பி. கோரிக்கை: காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை நீட்டிக்கப்படும் – ரயில்வே

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் மைதானங்களில் பீர் விற்க கத்தார் அரசு தடை விதிப்பு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலகல்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – கவனக் குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் வழக்கு

இந்தியாவில் பல வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வஉசியின் 86-ம் ஆண்டு நினைவு நாளில் 150-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

சிறையில் இருந்த 15 நாளில் சூரிய வெளிச்சத்தை கூட காணவில்லை – சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்

இந்து மதத்தை சேர்ந்த 200 பேரை காசி அழைத்துச் செல்ல அறநிலையத் துறை முடிவு

சென்னையில் கொசுப்புழு உற்பத்தி: 41 இடங்களின் உரிமையாளர்களுக்கு ₹1.47 லட்சம் அபராதம்

திருவாரூர், சேலம், கரூர், செங்கல்பட்டில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி; ஜனவரியில் தொடக்கம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழக மீனவர்கள் கைது: ஒரு சிறு துரும்பை கூட ஒன்றிய அரசு கிள்ளிப்போடவில்லை – மார்க்சிஸ்ட்

பீமா கொரேகான் வழக்கில் முன்னாள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை கோர்ட் ஜாமின்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை – 5,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

பீகார்: நாளந்தாவில் கட்டப்பட்டு
வந்த பாலம் இடிந்து விபத்து; சிக்கியோர் விவரம் தெரியவில்லை

தமிழகத்தில் டோர் டெலிவரி முறை தொடர்ந்தால் வியாபாரிகளே இருக்க முடியாது – விக்கிரமராஜா

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் – இந்திய வீராங்கனை மாணிகா பத்ரா அரையிறுதிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 3,687 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன

Comment here