எஸ் ஏ சின்னசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேட்டி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்ஏ.சின்னசாமி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூபாய் 42-ம், எருமை பாலுக்கு ரூபாய் 51 கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி தர வேண்டும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராம பால் கூட்டுறவு ஆவின் சங்கங்களில் பணிபுரியும் 25 ஆயிரம் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

________________________________________________________________________________

கோவை  : வால்பாறையில் அரசு பொதுத்தேர்வில் உற்சாகமாக பரீட்சை எழுதிய மாணவ மாணவிகள்:

மார்ச் 13 வால்பாறையில் அரசு பொதுத்தேர்வில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. மற்றும் சோலையார் டேம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி. . தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஆகிய மூன்று தேர்வு மையங்களிலும் தமிழ் முதல் தாள் தேர்வில் 463 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் வால்பாறை தாலுகாவில் 39 பேர் பரீட்சை எழுத வரவில்லை. அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் பொள்ளாச்சி தாலுகாவில் பொதுத்தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பொள்ளாச்சி தாலுகாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வால்பாறை தாலுகாவில் இணைக்கப்பட்டிருந்தது.

வால்பாறை பகுதியில் பள்ளிகள் வாரியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 197 பேரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 82 பேரும் பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 39 பேரும் ஆக மொத்தம் 318 பேர் தேர்வாளர்கள். இதில் 39 (absent) தேர்வு எழுத வராதவர்கள். இன்று மட்டும் எழுதியவர்களின் எண்ணிக்கை 279 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று நடைபெற்ற அரசு பொது தேர்வில் மாணவ மாணவிகளிடம் கேட்ட பொழுது கேள்வி பதில் மிகவும் எளிமையாக இருந்தது எழுதுவதற்கு சிரமமின்றி எழுதியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகள் கொரோனா காலங்களில் பரிட்சை இன்றி எழுதி அனைவரும் தேர்வு பெற்றனர. தற்போது அரசு தேர்வை சிறப்பான முறையில் எழுதியது எங்களுக்கு மகிழ்ச்சியாக அனுபவமாகவும் உள்ளது என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

________________________________________________________________________________

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் :      

சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

________________________________________________________________________________

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.

தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’.

முன்னதாக, சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் இடம்பெற்ற இந்திய திரைப்படமான ஆர் தட் ப்ரீத்ஸ் படம் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.

________________________________________________________________________________

தருமபுரி : யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன்-பெல்லியை வைத்து வன உயிரின ஆர்வலர் கார்த்திக்கி என்பவர் எடுத்த The Elephant Whisperers குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கான மகிழ்ச்சி என்று இந்த குறும்படத்தில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்மையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை யானை கூட்டத்துடன் இணைக்கும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் இருந்து பொம்மன் உள்ளிட்ட யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறும்படத்தில் வரும் யானை குட்டியை குட்டியை பொம்மன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் இந்த யானையை வளர்க்கும் முறைகள் குறித்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது தமக்கும் தம்மை போல வனத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் பெருமையாக உள்ளதாகவும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கே மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளதாகவும் பொம்மன் தெரிவிக்கிறார். தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்டி யானைகளை யானைக் கூட்டங்களுடன் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ள பொம்மனை சந்தித்தோம்.

ஆம்பூர் பிரியாணி கடையில் அதிரடி ஆஃபர் 100 தண்டால் எடுத்தால் ஒரு பக்கெட் பிரியாணி இலவசம் இளைஞர்களின் உடல் ஆரோக்கியம் நலன் கருதி இந்த அதிரடி சலுகை:

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்து சோத்துப்பாக்கத்தில் கடந்தஎட்டு ஆண்டுகளாக
ஆம்பூர் பிரியாணி கடைஇயங்கி வருகிறது, இந்த கடையில் ஆண்டுக்கு பலமுறை அதிரடி ஆஃபர்களை அறிமுகம் செய்து இலவச விற்பனையை செய்து வந்தது, இன்று அதிரடி சலுகையாக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இப்பொழுது ஒரு புதிய சலுகையை அறிவித்து இருந்தது.

மேலும் ஒரு நபர் 100 தண்டால் எடுத்தால் ஒரு பக்கெட்பிரியாணி இலவசமாக வழங்குவதாக
அறிவித்து இருந்த நிலையில் இன்று 26 இளைஞர்கள் கலந்து கொண்டு 100 தண்டால் எடுத்து இலவச பிரியாணியை பெற்று சென்றனர். மேலும் கடையில் புதியஉணவாக குழிப்பணியாரம் கொழுக்கட்டை சுண்டல் மற்றும் இயற்கைமூலிகைகள் கொண்டு சூப் வல்லாரை கீரை முடக்கத்தான் தூதுவலை ஆகிய கீரைகளில் இருந்து சூப் வகைகளை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

________________________________________________________________________________

கூடங்குளம் : அணுமின் நிலைய முதல் அணு உலையில் 600 நாட்களாக தொடர் மின் உற்பத்தி செய்து சாதனை. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை எரிபொருள்கள் நிரப்பும் நாட்களை தவிர்த்து தொடர்ச்சியாக 600 நாட்கள் மின் உற்பத்தி செய்து 14 114 மில்லியன் யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. கடந்த அக்டோபர் 2013 ஆண்டிலிருந்து இதுவரை 52665 மணி நேரம் செயல்பட்டு47470 மில்லியன் யூனிட் மின்சாரத்தை முதல் அணு உலை ஆனது உற்பத்தி செய்துள்ளது.

இரண்டாவது அணு உலையானது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை34573 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள முதல் அழுத்த நீர் அணு உலைகள் இதுவாகும். அனுமின் உற்பத்தியில் இது ஒரு சாதனை என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

________________________________________________________________________________

மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் :

காய்ச்சல் வந்தாலும், புளியமரத்தில் புளி விழுந்தாலும் நாங்கதான் பொறுப்புனு சொல்றாங்க மெண்டலாகி ரோட்டில் திரியுறோம், வெயிலில் அலைந்து செத்துபோங்க என்ற அளவுக்கு பணிச்சுமை அளிக்கின்றனர், இலவச வீடுகளுக்கு கணக்கு மட்டுமே எடுக்குறோம், வீடு கட்டமாட்றங்கனு பொதுமக்கள் திட்டுறாங்க – வேதனையை கொட்டி தீர்த்த ஊரக வளர்ச்சித்துறையினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணை தாமதத்தை கண்டித்தும், ஊராட்சி செயலாளரின் பணி விதிகள், சிறப்பு நிலை தேர்வு நிலை அரசாணை வெளியிடாதது, கணிணி உதவியாளர் பணிவரன்முறை மற்றும் ஊதிய மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் ஊரக வளர்ச்சித் துறை எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர் இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பேசியபோது காய்ச்சல் வந்தாலும், புளியமரத்தில் புளி விழுந்தாலும் நாங்கதான் பொறுப்புனு சொல்றாங்க மெண்டலாகி ரோட்டில் திரியுறோம், வெயிலில் அலைந்து செத்துபோங்க என்ற அளவுக்கு பணிச்சுமை அளிக்கின்றனர், இலவச வீடுகளுக்கு கணக்கு மட்டுமே எடுக்குறோம், வீடு கட்டமாட்றங்கனு பொதுமக்கள் திட்டுறாங்க என தங்களமு வேதனையை கொட்டி தீர்த்தனர்.

________________________________________________________________________________

தென்காசி -நெல்லை இடையேயான 72 கி.மீ மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் :

யாகங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர்.

தென்காசி -நெல்லை – திருச்செந்தூர் இடையான ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.121 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அந்தப் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், பணி தொடக்க காலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பணி தொடங்க கால தாமதமான சூழலில், 2022-ல் முடிக்கப்பட வேண்டிய பணியானது, தற்போது 2023 ஆம் ஆண்டு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று தென்காசி – நெல்லை இடையே முடிவு பெற்ற, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஓட்டமானது நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலானது இயக்கப்பட்டு சோதனை நடத்த தற்போது, ஓட்டம் தொடங்கியுள்ளது.

புதியதாக அமைக்கப்பட்ட இந்த மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் நடைபெற்ற, சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் சித்தார்த் தொடங்கி வைத்தார். அவருடன், மதுரை கோட்டை ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ஏராளமான ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக, ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு யாகங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ரயில் சேவையானது தொடங்கப்பட்டது. தற்போது, தொடங்கப்பட்ட இந்த மின் மின்மயமாக்கல் ரயில் சேவையில் 6 பெட்டிகளை இணைத்து முதற்கட்டமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டமானது நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.