எல்லைசேலம்: மீனவர் ராஜா மீது வனவிலங்கு வேட்டை தொடர்பாக 3 வழக்குகள் உள்ளது. அரிசிபாளையம் கிராமத்தில் ராஜாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோதுதான் கர்நாடக வனத்துறையினருக்கும் ராஜா கும்பலுக்கு இடையே மோதல் நடந்துள்ளது. மோதலுக்கு பிறகு மாதேஸ்வரன் மலை பகுதியில் இருந்து ராஜா அவரது நண்பர்கள் தப்பிச்சென்றனர் என்று சேலம் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர்: ஏப்.25: திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கண்டியன் கோவில், அய்யம்பாளையத்தில், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மானிய உதவியுடன் வழங்கப்பட்ட சோலார் மின் மோட்டார் கருவியையும், கலெக்டர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கொசவம்பாளையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் தலா ரூ.87 ஆயிரத்து 500 மானியத்தில் குறைந்த மதிப்பீட்டிலான வெங்காய சேமிப்பு கிடங்குகளையும் மற்றும் அய்யம்பாளையத்தில், வேளாண் துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரத்து 630 மானிய உதவியுடன் வழங்கப்பட்ட தெளிப்பு நீர் பாசன கருவியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசின் மானிய விலையில் பெறப்பட்ட வேளாண் உபகரணங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

டெல்லி: ‘காளி ஆவணப்பட போஸ்டர் விவகாரத்தில் இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மே.14ம் தேதி சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையான போட்டிதான், சேப்பாக்கத்தில் எம்.எஸ்.தோனி விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது சேப்பாக்கத்தில் இந்தாண்டின் கடைசி போட்டி என்பதால், தோனிக்கு Farewell ஏற்பாடு செய்யப்படலாம் என சென்னை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை: டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது டெல்லி போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களை தாக்கியதுடன் பெரியார், மார்க்ஸ் படங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: 2 வாரத்தில் குடியிருப்பு, நிறுவனங்களில் 1,470 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரூ.5.09லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்: அழகாபுரியில்உள்ள சிட்கோவில் பழையவாகன டயர்களை மறுசுழற்சிசெய்யும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

சென்னை: கரூர் மாவட்டத்தில் மாரப்படைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.

திருச்சி: குழுமாயி அம்மன் கோயில் அருகே 2 ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரை, சோமு ஆகியோர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சென்னை: அனுமதியின்றி வீட்டில் கிளி வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கிளிகளை வளர்த்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் அவற்றை எடுத்து சென்றனர். யூடியூபில் பதிவிட்ட வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வேலூர்: குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாயில் 6 மாத பெண் சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிசுவை வீசிச் சென்றவர்கள் யார்? என குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.