சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ஏப்ரல் முதல் 442 தாழ்தள பேருந்துகள்:
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்குதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜன.20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருக்கோவிலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே நடந்த வாரச் சந்தையில் ரூ.1.5 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனையானது. வாரச் சந்தையில் ஆடுகளை காட்டிலும் மாடுகளே அதிகமாக விற்பனையானதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கறவை மாடு, வண்டி மாடு என ரூ.1.5 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று (10.01.2023) நண்பகல் 12 மணி முதல் 12ம் தேதி மாலை 5 மணி வரை காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறும் போது இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் அறுவடை பரிசோதனையின் போது அலுவலர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பரிசோதையின்போது குறுக்கிட்டால் கிராமத்திற்கு காப்பீடு இழப்புத்தொகை கிடைக்காது எனவும் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக இவ்வாண்டு ரூ.1.5 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை:

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை. சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை: முன்னாள் அதிபர்களான கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிப்பு! விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு குற்றச்சாட்டு.

நேபாளம்: மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமால் தஹால் ‘பிரசந்தா’ தலைமையிலான கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையுடன் வெற்றி! பிரசந்தாவுக்கு ஆதரவாக 268 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

புதுச்சேரி:மதுக்கடைகள் திறக்க தடை புதுச்சேரியில் ஜனவரி 16ம் தேதி மதுபானக் கடைகளை மூட உத்தரவு. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கலால்துறை உத்தரவு.

உளுந்தூர்பேட்டை: புறவழிச்சாலையில் சென்ற மினி டெம்போ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு; திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம். வண்டியில் புகை வந்ததை அறிந்து, ஓட்டுநர் இறங்கிப் பார்த்தபோது தீப்பிடித்துள்ளது; யாருக்கும் காயம் இல்லை.

உளுந்தூர்பேட்டை: ஆட்டுச் சந்தையில் பொங்கல் சிறப்பு விற்பனைக்காக வந்துள்ள ஆடுகள்; சுமார் ₹1 கோடி அளவுக்கு ஆடுகள் விற்கப்படலாம் என தகவல்.

RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. சிறந்த பாடல் பிரிவில் விருதை தட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும் – சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு தகவல்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட விவசாய பயனாளர்களில் 50,000வது நபருக்கு மின் இணைப்பு ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடி வருகிறார். கட்சி விதிகளின்படி எந்த ஒரு உறுப்பினரவது, கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவரது உறுப்பினர் பதவி தானாக காலாவதி ஆகிவிடும் என்றார்.

ஆளுனர் பேசும்போது, முதலமைச்சரை பேச அனுமதித்திருக்கக் கூடாது – அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேச்சு. என் அனுமதி பெற்றுதான் முதலமைச்சர் பேசினார்; விதி 286இன் படி, சூழலை பொறுத்து பேரவைத்தலைவர் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் உண்டு. அதன்படியே, அனுமதி கொடுத்தேன் – சபாநாயகர் பதில்.

அமைச்சரவை என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ, அதை வாசிக்கின்ற உரிமை மட்டும்தான் ஆளுநருக்கு உண்டு;அதில், எந்த பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு கிடையாது – சபாநாயகர்
நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்; எதுவும் பலனளிக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

நீங்கள் நிறைவேற்றி அனுப்பிய மசோதா குடியரசுத் தலைவருக்கு சென்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சர் திருப்பி அனுப்பினாரே அந்த தகவலை மறைத்தீர்களா, இல்லையா?, ஒட்டுமொத்தமாக முழு பொறுப்பேற்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

குறவன் குறத்தி’ என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த தடை -உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாதி அல்லது பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமான நடனங்கள் இல்லை என்பதை தமிழ் நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் – நீதிமன்றம்

வேலூர்: மாவட்டத்தில் ஜனவரி 16, மற்றும் 26ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு.