ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்” – அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு.

” தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொண்டோம்”. கூட்டணி கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு- ஜி.கே.வாசன்.

நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம் போட்டியிடவும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே இளங்கோவன் அவர்களின் இளைய மகன் சஞ்சய் போட்டியிடவும் அதிக வாய்ப்பு …
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை. அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்..

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஜனவரி 23ம் தேதி முடிவு எடுக்கவுள்ளது. சென்னையில் ஜனவரி 23ல் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி 23ல் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்க்கப்படுகின்றன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து வரும் 27ம் தேதி முடிவு செய்வதாக அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பழனிசாமி, பன்னீர்செல்வம் இருதரப்பினரும் இடைதேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை முடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழலில் அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு –தினகரன்

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது – தினகரன்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்திக்க குவிந்து வரும் காங்கிரஸ் தொண்டர்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வலியுறுத்தல்.ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து போட்டியிட வலியுறுத்தும் ஆதரவாளர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தினகரன் பேட்டி சென்னை ராயப்பேட்டை பத்திரிகையாளர் சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் மேலும் நாங்கள் தோல்வியை தோல்வியை கண்டு துவண்டு போக மாட்டோம் கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்தது போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசிக்கொண்டிருந்த போது, அதனை செல்போனில் வீடியோ எடுத்த நபரை அங்கிருந்தவர்கள் தாக்க முயன்றனர்.அந்நபரை வெளியே இழுத்துச் சென்று விட்டனர்; இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓ.பன்னீர்செல்வம்.

பா.ஜ.க. போட்டியிடுவதற்காக முடிவு செய்தால், அவர்களுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவிக்கத் தயார். சின்னம் முடங்குவதற்கான காரணமாக ஒரு காலமும் இருக்க மாட்டேன்.அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன்.இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு – ஓபிஎஸ்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 2வது மகன் சஞ்சய் சம்பத் போட்டி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கருத்தும் தற்போதே எழத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். இதனால் அவரது குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஈரோடுகிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கியது.. அமைச்சர்கள் நேரு முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கை சின்னம் அச்சடிப்பட்ட நோட்டீசை தற்பொழுது வழங்கி வாக்கு சேகரித்துக் கொண்டுள்ளனர்.