ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித தலத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு. சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினர் நாளை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு. கோயிலின் புனித தன்மை கெடும் என குற்றம் சாட்டி மத்திய,, மாநில அரசுகளுக்கு கண்டனம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜெயின் சமூகத்திற்கு சொந்தமான பரஷ்வநாதர் கோயில் உள்ளது. அதுபோல் குஜராத் மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் புனித தலமாக கருதப்படும் ஆதிநாதர் கோயில் உள்ளது.

இதில் ஜார்கண்ட் மாநிலந்தில் உள்ள ஜெயின் சமூகத்தினரின் புனித தலமாக சுற்றுலா தலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஜெயின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புனித தலத்தை சுற்றுலா தலமாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை சிதம்பரத்தில் ஜெயின் சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறிய ஜெயின் சமூக நிர்வாகி கமல்கிஷோர்ஜெயின், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜைன மத புனித கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டால் கண்ணியம் இருக்காது. புனிதம் இருக்காது. அதனால் இந்திய அரசுக்கு நாங்கள் எங்கள் கடனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை வாபஸ் பெறுமாறு ஜார்க்கண்ட் அரசையும், மத்திய அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்த புண்ணிய தலம் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டால் ஜைன மதத்திற்கு எதிரான கொள்கைகள், நிகழ்வுகள் நடைபெறும். கோயிலின் புனிதத்தன்மை காக்கப்படாது. அதனால் இந்த செயலை கண்டித்து நாளை சிதம்பரத்தில் ஜைனர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே ஜார்க்கண்ட் மாநில அரசும், மத்திய அரசும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.

பேட்டி. திரு. கமல்கிஷோர்ஜெயின், சிதம்பரம்.