குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீரானது கொட்டி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் குறைந்து நீர் வரத்து சீரான பின்னர் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சூர் அருகே செல்போன் டவரில் ஜெனரேட்டரில் தீப்பற்றி எரிந்து வருவதால் குன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து 30 கிலோமீட்டர் மஞ்சூர் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மஞ்சூர் அருகேயுள்ள மணிக்கல் பகுதியில் உள்ள ஏர்டெல் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அங்கிருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தனர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு குன்னூர் தீயனைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்புத்துறையின் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.