தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 1,546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதி உள்ள நிலையில் இதில் 80%-ஐ நிரப்பி வைக்க உத்தரவு.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800, அரசுக்கு ரூ.325 என அறிவிப்பு!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி (INCOVACC) தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325க்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு.

கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி iNCOVACC ஜனவரி 4வது வாரத்தில் இருந்து கிடைக்கும் என்றும் அறிவிப்பு.
iNCOVACC கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும்.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா?.. விரைவில் அறிவிப்பு:

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரையாண்டு விடுமுறைக்குப்பின் ஜன.2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துறை அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது; தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும்”
– அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
– அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி