வருடத்தில் ஒரு முறை கிணற்றிலிருந்து வெளியே வரும் செல்லியம்மன். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் செல்லியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து பவனியை தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம்: புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் செல்லியம்மன் ஆலயம் உள்ளது வருடத்தில் ஒரு முறை செல்லியம்மன் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு அலங்காரம் செய்து தேர் ஏற்றி வைத்து கிராம முழுவதும் வீதி உலா வரும் இந்தாண்டும் செல்லியம்மன் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு தேர் பவனியை கடலூர் மாவட்ட காவல கண்காணிப்பாளர் ராஜாராமன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கிராம மக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராமனுக்கு ஊர் மரியாதை செய்தனர். செல்லியம்மன் தேர் அனைத்து விதிகளிலும் வீதி உலா சென்றது, கேரளா சண்டை மேளம் முழங்க இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு செல்லியம்மன் தேரை இழுத்து வலம் வந்தனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செல்லியம்மன் வழிபாடு இந்த ஊரில் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. தேர் திருவிழா முடிந்ததும் அம்பாளை மீண்டும் கிணற்றுக்குள் வைத்து விடுவர் என்பது குறிப்பிடதக்கது.

________________________________________________________________________________

சங்கரன்கோவில் அருகே பிள்ளையார் குளம் வட பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஒரு சமூகத்தினரை சேர்ந்த சேர்ந்தவர்கள் சாமி கும்பிடச் செல்ல இருப்பதால் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குறிப்பு.

தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில் அருகே பிள்ளையார் குளம் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் ஒரு தரப்பினர் இன்று சாமி கும்பிட காவல்துறை அனுமதி அளித்துள்ளதால் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்ப்படும் பட்ச்சத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தனியார் பள்ளி வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு.

________________________________________________________________________________

“ஈஸ்டர்“ திருநாள் வாழ்த்துச் செய்தி:

மனித குலத்தின் மீட்சிக்காக அன்பையும் கருணையையும் போதித்த இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் புத்துயிர் பெற்று உயிர்த்தெழுந்த நன்நாளை “ஈஸ்டர்“ திருநாளாகக் கொண்டாடும் கிறித்துவ சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஈஸ்டர்“ பெருநாள் அனைவரது வாழ்விலும் அளப்பரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் கொண்டு வர வேண்டும்.
அனைவரது உள்ளங்களிலும் தூய்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் மேலோங்கி இறைவனின் அருளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.

________________________________________________________________________________

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில்; அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி சுவாமி தரிசனம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவாக வந்து தீக்குழி முன்பு வந்தடைந்த பின்னர் கரகத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர்.சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.விழாவில் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.

________________________________________________________________________________

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதுமான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரம் பாடிய முதல்வர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு அம்மை ஞானப்பால் வழங்கிய அதிகம் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 24ஆம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனத்திலிருந்து மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பாதயாத்திரையாக சீர்காழிக்கு வருகை புரிந்தார். இதனை முன்னிட்டு சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றின்கரையில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளங்கள் மல்லாரி மேளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க பொய்க்கால் குதிரை மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் காமெடி ஆட்டம் ஆகியவற்றுடன் 10 கைகள் உடன் அம்மனின் பல்வேறு அவதாரங்களை வேகமாக அணிந்த கலைஞர்கள் செல்ல அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ரிஷபங்கள் ஒட்டகம் இவற்றுடன் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஊர்வலத்திற்கு பின்பு மடாதிபதி சட்டநாதர் ஆலயத்திற்கு எழுந்தருளினார். கண்ணை கவரும் விதமாக நடைபெற்ற ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

________________________________________________________________________________

தமிழகத்தின் இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை நாமபுரீஸ்வரர் கோயிலில் 48 ஆம் நாள் மண்டலாபிஷேக நிறைவு நாள் விழாவை முன்னிட்டு மல்லாரி இசைக்க பரதநாட்டிய கீர்த்தனை நிகழ்வு விமர்சியாக நடைபெற்ற நிலையில் இக்கோயிலில் நடைபெற்ற தேர்பவனி விழாவிலும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம்: ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தமிழகத்தின் இரண்டாவது குருஸ்தலமாக அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேக விழா மிக விமரிசியாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 48 நாட்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வந்தது.அதன் நிறைவு நாளான இன்று மண்டல பூஜை விழா கோலாகலமாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மல்லாரி இசைக்க பரதநாட்டிய கீர்த்தனை கலை நிகழ்ச்சி விமரிசியாக நடை பெற்றது.இதில் பரதநாட்டிய கலைஞர்கள் கோயிலில் வளாக மையப்பகுதியில் நாமபுரீஸ்வரரை போற்றும் வகையில் பரத நாட்டியம் ஆடி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தியது காண்போரை கவர்ந்தது.

அதன்பின்னர் தேரில் அம்பாளும் உற்சகமூர்த்தியும் எழுந்தருள பக்தர்கள் பக்திபரவசத்துடன் தேர்பவனி விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் வண்ண விளக்குகள் மிளிர பட்டாசுகள் வெடிக்க விமர்சையாக நடைபெற்ற இந்த தேர் பவனி காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் தேர் கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வளம் வந்து நிலை நின்றது. மேலும் இந்த தேர் பவணியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மேலும் இந்த தேர் பவனி நிகழ்ச்சியில் தெரு நெடுகிலும் நின்ற ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செலுத்தவும் நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் வேண்டி நாமபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளிலும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளிலும் பக்தர்கள் ஈடுபட்டனர்.

________________________________________________________________________________

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துறவி ஸ்ரீராமானந்த சுவாமி சிறப்பு தீப ஆர்த்தி துவக்கி வைத்தார்:

நெல்லை மாவட்டம்: அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி ஒரு ஆன்மீக நதியாகவும் திகழ்கிறது. குறிப்பாக பாபநாசம் பாபநாசர் கோவில் முன் பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

இந்த தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மகா புஷ்கரணி விழா கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்றது. இதனை அகில பாரத துறவியர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை பாபநாசத்திற்கு அகில பாரத துறவியர்கள் சங்க நிறுவனர் ஸ்ரீராமானந்த சுவாமிகள் வருகை தந்தார். அதையொட்டி பாபநாசம் கோவில் படித்தரையில் சிறப்பு தீப ஆர்த்தி விழா நடைபெற்றது. அப்போது மஞ்சள், குங்குமம், பால் உள்ளிட்டவற்றால் தாமிபரணி நதியை வழிபட்டு அபிஷேகம் செய்து மலர் துவி சிறப்பு ஆர்த்தி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை புஷ்கரணி ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ராஜா செய்திருந்தார்.

________________________________________________________________________________

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் ஜூன் 30ம் தேதி திருத்தேரோட்டமும்,31ம் தேதி தங்க காக வாகனம் வீதியுலா நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம்.சப்த விடங்கர் ஸ்தலங்களில் நகவிடங்கர் ஸ்தலமாகவும்,நவக்ரஹ ஸ்தலங்களில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக விளங்கும் ஸ்தலமாகவும் திகழும் இக்கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப கொடியை வீதியுலாவாக எடுத்துச் சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்த பின்னர் கொடி மரத்து கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள்,மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச முர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வரும் 23ம் தேதியும்,பஞ்ச முர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா வரும் 28ம் தேதியும், 30ம் தேதி திருத்தேரோட்டமும், 31ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், ஜீன் 01ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீசெண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் காட்சி வரும் 24ம் தேதி இரவு நடைபெறுகிறது.

________________________________________________________________________________

பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா- கெங்கையம்மன் சிரசு முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி:

வேலூர் மாவட்டம்: குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதியான இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது

பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவை காண இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று அதிகாலை 4 மணி முதல் பூஜை புனஸ்காரங்களுடன் கெங்கையம்மன் சிரசு பல குடைகளுடன் முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் புலி ஆட்டம், சிலம்பாட்டத்துடன் வீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்து சூரத் தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சிரசு திருவிழாவில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

________________________________________________________________________________

வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்:

திருவண்ணாமலை மாவட்டம்: வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி வசந்த விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடிக் கொண்டு உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர். இந்த சிறப்புமிக்க அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்து சென்றனர்.