காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியதுகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான வரும் மார்ச் 1ஆம் தேதி தங்க பல்லக்கு நிகழ்ச்சியும், மார்ச் 3ஆம் தேதி ரத உற்சவமும், மார்ச் 5ஆம் தேதி வெள்ளி ரத உற்சவம் நடைபெறும், மார்ச் 8 ஆம் தேதி விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.சரஸ்வதி லட்சுமியுடன் காமாட்சி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கும்பகோணம் : மாசிமக பெருவிழா கும்பகோணம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் தொடர்ந்து முற்பகல் ஆதிகும்பஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கெளமேஸ்வரர் ஆகிய மேலும் 5 திருக்கோயில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டம் : கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் மகத்தை முன்னிட்டு 11 நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

உத்தரமேரூர் :  வரலாற்று சிறப்புமிக்க சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவ- திருவிழா கோலாகலம்!!உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற கோவிலான ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா இன்று வெகு விமரிசையாக துவங்கியது. விழாவையொட்டி ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தபின் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேவி-
பூ-தேவியர்களுடன் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாட வீதி வழியாக திரு வீதியுலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தீபாராதனை காட்டியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன்
மேளதாளங்கள் முழுங்க கோவில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தரவரதராஜப் பெருமாள்
ஸ்ரீதேவி- பூதேவிகளுடன் எழுந்தருளி குளத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த தெப்போற்சவத்தின் முதல் நாளான இன்று குளத்தினை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு உற்சவம். தங்க மான் வாகனத்தில் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் வீதி உலா வந்த காமாட்சி அம்மன்.

புதுச்சேரி : கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தின் சூரசம்கார உற்சவ விழா இன்று நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று முருகனை தரிசனம் செய்தார்.

புதுக்கோட்டை : பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கும் நிலையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு இன்று கோயில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வு அக்கோயில் வளாகத்தில் மிக விமர்சியாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திகழ்கிறது.இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலின் மாசித் திருவிழா நாளை பூச்சொரிதலுடன் மிக விமர்சியாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு திருவப்பூர் கவிநாடு கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினரால் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை விமர்சியாக நடைபெற உள்ளது. கவிநாடு கண்மாயில் நடைபெறும் இந்த போட்டியில் ஆயிரம் காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை முன்னிட்டு இன்று இரவே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு கிராமத்துக் கோயில் காளைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கோயில் முன்பு மாடுகளுக்கு வேட்டி கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதோடு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.

இவ்வாறு பூஜை செய்யப்படும் காளைகள் நாளை ஜல்லிக்கட்டு போட்டி என்பது முதலிலேயே அவிழ்த்து விடப்படும் நிலையில் அதற்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பு சிறப்பு வழிபாடு மற்றும் மரியாதை செலுத்துவதை தொன்று தொட்டு கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதேபோல் வெளியூரை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளின் இன்று இரவே வந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி : திங்கள் நகரில் இருந்து பல கிராமங்களில் இருந்து வருகை தந்த வேல் காவடி, பறக்கும் காவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பலவகையான காவடி ஊர்வலம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர் – இதனால் சாலைகளில் போக்குவரத்து மாற்று வழிகளில் இயக்கப்ட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் இருந்து அக்கம் பக்கம் பல கிராமங்களில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் வேல் காவடி, பறக்கும் காவடி உள்ளிட்ட பல வகை காவடிகள் கட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் பங்கேற்க புறப்பட்டு செல்வது வழக்கம் அந்தவகையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியதை தொடர்ந்து இன்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் இருந்து பல கிராமங்களில் இருந்து வருகை தந்த வேல் காவடி, பறக்கும் காவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பலவகையான காவடி ஊர்வலம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர் – இதனால் சாலைகளில் போக்குவரத்து மாற்று வழிகளில் இயக்கப்ட்டது.

கிருஷ்ணகிரி : பெத்ததாளபள்ளியில் சுயம்பு ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் 14வது ஆண்டு கங்கணம் கட்டும் திருவிழாவையொட்டி 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ராயகோட்டை சாலையில் உள்ள பெத்ததாலப்பள்ளி கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் 14வது ஆண்டு கங்கணம் கட்டும் திருவிழா வெகு விமரசியாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம் மக்கள் கரகம் ஏந்தியும், அம்மன் வேடம் அணிந்தும், அம்மனை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுவந்தனர்.

பெத்ததாலப்பள்ளி மற்றும் சுற்றுவட்ட்டாராப் பகுதி பெண்கள் 1008 பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த விழாவில் கிருஷ்ணகிரி தருமபுரி திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்த மண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

கடலூர் : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிப்புரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு தீர்த்தப்புரிஸ்வரர் ஆலயத்தில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு கொடியோற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சூரியனார் கோயில் வடம் 28 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் கலந்துகொண்டார்.

செங்கல்பட்டு : ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு முருகர் உற்சவ தேர் வருவதை தடுத்து நிறுத்துவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அப்பகுதி மக்கள் ஆவேசம்.

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ள நிலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நான்கு மாடவீதிகளில் தெரு வீதி உலா வருவார்.

இதில் 8ஆம் நாள் நிகழ்வாக பரிவேட்டை தேர் உற்சவம் திருப்போரூர் சுற்றியுள்ள கிராமங்களான தண்டலம் ஆலத்தூர் வரை சென்று தீப ஆராதனைகள் பெற்றுக் கொண்டு திரும்பும் இந்த உற்சவர் தீரானது இடையிலுள்ள ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியான படவட்டம்மன் கோயில் தெருவில் மட்டும் செல்ல விடாமல் மாற்று சமூகத்தினர் ஆண்டுதோறும் புறக்கணித்து வருகின்றனர்.

தேரானது படவட்டம்மன் தெருவில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதி மக்கள் வழிபடவும் அப்பகுதியினர் தீபாரதனைகள் பெற்று செல்ல வேண்டுமென்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்த நிலையில் கடந்த வாரம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்படுவதால் இன்று திருப்போரூர் கந்தசாமி கோயில் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி மற்றும் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் இரு தரப்பினருக்குமான தனித்தனி பேச்சுவார்த்தை நடைபெற்றதில் மாற்றுச்சமூகத்தை சேர்ந்தவர்கள் சேரிக்குள் தேர் செல்லக்கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இது அரசு கோயில் அல்ல என்றும் ஆதினம் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னரே செரிக்குள் உச்சவர் தேர் போகலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

பின்னர் இறுதி கட்டமாக தலித் சமூகத்தை சேர்ந்த பகுதி மக்கள் வசிக்கும் இடங்களில் முருகர் உற்ச்ச தேர் வருவதற்கான சத்திய கூறுகள் இல்லாதவாரு மெத்தனமாக பேசியதால் அதிகாரிகள் அப்குதி மக்களிடம் கூறியதின் பேரில் சேதிக்குள் தேர் வந்தே தீர வேண்டும் இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டமாக உண்ணாவிரதம் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் உற்சவம் தேரோட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்துபவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அரியலூர்: திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி கிராமத்தில் சிவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்றதுமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமகப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான மாசிமகப் பெருவிழா,  கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிகள், அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் மலர் அலங்காரத்துடன் கோயில் முகப்பில் உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருள, சுமார் 64 அடி உயரமுள்ள கொடிமரத்துக்கு, மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடிமரத்தில் சாதம் சாத்தப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்களால் வேத மந்திரம் முழங்க நந்தியெம் பெருமான் உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதம் மற்றும், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வருகின்ற 08ஆம் தேதி வரை இரவு சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 5ஆம் தேதி திருத்தேர் வீதியுலா நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி : பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா தொடங்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் இன்று வார விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்களில் வருகை அதிகரித்துள்ளது – கேரளாவில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்து பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி : பிரசித்திபெற்ற திருவட்டார் ஆஞ்சனேயர் திருக்கோவிலில் நாட்டின் இல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் நன்மைக்காக பெண்கள் மட்டுமே பங்கேற்ற ஆஞ்சனேயர் அஷ்டோத்திர லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றுவருகிறது இந்த லட்சார்ச்சனை பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுவருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் அருள்மிகு ஆஞ்சனேயர் திருக்கோவில் இத்திருக்கோவிலில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் ராணுவவீரர்களின் நன்மைக்காகவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் நாட்டில் நோய்நொடிகள் குறைவதற்காகவும் வளம் பெருகவும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக குடும்ப பெண்கள் விரதமிருந்து ஆஞ்சனேயர் அஷ்டோத்திர லட்சார்ச்சனை பூஜையில் ஈடுபட்டனர் 3கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்த பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஒரு லட்சம் தடவையாக ஆஞ்சனேயர் அஷ்டோத்திரநாமங்களை உச்சரித்தனர் இந்த ஆலயத்தில் கடந்த 5ஆம் தேதி கோவா ஆளுநர் பங்கேற்று புது ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டபட்டது குறிப்பிடதக்கது.

மாசி மக கொடியேற்றம் :

மாசிமக பெருவிழா கும்பகோணம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களில் இன்று மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் மாசி மக விழாவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் மகாமக பெருவிழாவும் நடைபெறும்.

இந்நிலையில் இன்று காலை மகாமகக் குளம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காலை கொடிமரத்திற்கு பால் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்து நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினை மேளதாளம் முழங்க ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் தொடர்ந்து முற்பகல் ஆதிகும்பஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கெளமேஸ்வரர் ஆகிய மேலும் 5 திருக்கோயில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது.