தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை; புதிய வகை கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை; பாதிப்புகள் குறையவில்லை எனில், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” -திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கொரோனாவுக்கு 2வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை: மருத்துவ நிபுணர்

”இந்தியாவில் ஒராண்டுக்கு முன்பே ஒமைக்ரான் அலை தாக்கிவிட்டது. அந்த தொற்று போதுமான அளவுக்கு ஒமைக்ரான் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவில்லை என்றால், இந்தியாவில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகள் எதுவும் கூடுதல் பாதுகாப்பை அளிக்காது. எனவே பல்வேறு காரணங்களால் 2வது பூஸ்டர் டோஸ் இப்போது தேவை இல்லை” என்று புனேவிலுள்ள நோய் எதிர்ப்பு நிபுணரான வினீதா பால் தெரிவித்துள்ளார்.

3 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு காப்பீடு பாலிசிகளில் சலுகை வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை.

காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீடு நிறுவனங்களிடம் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவல் தற்போது சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பெரும்பாலான மக்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக 3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீடு நிறுவனங்களிடம் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான ஆயுள் காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க காப்பீடு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்:

சீனாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 8ம் தேதி முதல் தளர்த்தப்படுகின்றன. அங்கு கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2020ல் பாஸ்போர்ட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், ஜனவரி 8ம் தேதியிலிருந்து மீண்டும் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இனி சீன நாட்டினர் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

நாட்டில் 4.12 லட்சம் விபத்துகள்: ஒரே ஆண்டில் 1.53 லட்சம் பேர் பலி:

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2021’ என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2021ல் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். 2020ல் கொரோனா ஊரடங்கினால் விபத்துகளின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது.

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2021’ என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2021ல் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். 2020ல் கொரோனா ஊரடங்கினால் விபத்துகளின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது.