நெல்லை : ராதாபுரம் அருகே காரியாகுளத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த 2 பேரை ராதாபுரம் போலீசார் தேடி வருகின்றனர். ராதாபுரம் அடுத்த காரியாகுளத்தை சேர்ந்தவர் இசக்கி இவரது மகன் செந்தில்(43) சென்னையில் 108 அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் வீட்டின் முன்பாக கார் மற்றும் பைக்கை நிறுத்தியிருந்த நிலையில் இன்று அதிகாலை நேரம் மர்ம நபர்கள் இவரது காருக்கும், பைக்கும் தீ வைத்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். அதே நேரத்தில் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள பால்பாண்டி மகன் அருள் குமார்(36) இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார் இவரது வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். ஒரே ஊரில் இரண்டு வீடுகளில் ஒரே நேரங்களில் அடுத்தடுத்து கார் மற்றும் பைக் எரிக்கப்பட்டுள்ளது குறித்து ராதாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சா குடிகாரர்கள் இருவர் முன் விரோதம் காரணமாக வாகனங்களை தீவைத்து எரித்ததாக கூறப்படுகின்றது. கடந்த ஒரு வருடம் முன் விரோதம் காரணமாக 108 அலுவலக ஊழியர் செந்தில் க்கு சொந்தமான கடையில் திருடிய சம்பவத்தில் கண்ணன் என்பவர் செந்திலின் கையை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இதில் கண்ணன் மற்றும் ஸ்ரீதேவ் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்ததை அருள்குமார் கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் செந்தில் மற்றும் அருள்குமார் ஆகியோர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை நேரம் 2 மணி அளவில் தீ வைத்து விட்டு ஓடி உள்ளனர் . தீ மளமளவென எரிந்த நிலையில் அருகில் இருந்தவர்களில் உதவியாள் தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது . மேலும் புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் மற்றும் ஸ்ரீதேவ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் : குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பெரம்பலூர் அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததாலும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால் அதிருப்தி அடைந்த பெண்கள் இன்று காலி குடங்களுடன் பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பிரிவு பாதை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரு புறமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதனை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு : போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி .அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலைகளில் நிற்பதால் போக்குவரத்து காவல்துறையினர் திணறல். வத்தலக்குண்டுவில் உள்ள நெடுஞ்சாலை திண்டுக்கல் மற்றும் மதுரையிலிலிருந்து கொடைக்கானல், கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. தினந்தோறும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கம்பம், குமுளிக்கு செல்லும் பேருந்துகள் ஆயிரக்கணக்கில் சென்று வருவதால் இந்த நெடுஞ்சாலை போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்ட தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை வத்தலக்குண்டுக்கு வெளியே புற நகர் பகுதியில் போடப்பட்டது. ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. சென்னையிலிருந்து திண்டுக்கல் வழியாக குமுளி மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் வத்தலக்குண்டுவில் ஊருக்குள் வந்து இந்த நெடுஞ்சாலை வழியாகவே செல்கின்றனர். இதனால் வத்தலக்குண்டுவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு நகரப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பதும், போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து பேருந்தை தள்ளிக் கொண்டே சென்று பேருந்து நிலையத்தில் விடுவதும் வாடிக்கையாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் தினமும் போக்குவரத்து காவல்துறையினர் திணறி வருகின்றனர்.மேலும் சாலையோரங்களில் வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறையினர் பல மாதங்களாக கழிவு நீர் சாக்கடை கட்டி வருவதால் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி வருவதால் நெடுஞ்சாலை மிகவும் சுருங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும் இந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் அவலமும் நடந்தேறி வருகிறது. உடனடியாக வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை இந்த நெரிசலை தவிர்க்க புற நகர்ப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வாகனங்கள் பிரிந்து செல்ல ரவுண்டானா அமைத்து போக்குவரத்து போலீஸார் 24 மணி நேரமும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கோவை : சரவணம்பட்டி கரட்டு மேட்டுப்பகுதியில் இன்று அதிகாலை குற்றவாளியிடம் இருந்து கடந்த மாதம் கொலைக்காக பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளில் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய தகவலை தொடர்ந்து சிறப்பு காவல் துறை காவலர்கள் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் குற்றவாளியை நேரடியாக அழைத்து வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ய முற்படும்போது குற்றவாளியான சஞ்சய் ராஜா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையை நோக்கி சுட்டுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் கிருஷ்ண லீலா மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரும் தப்பித்து அப்பகுதியில் இருந்த மரத்திற்கு பின்னால் தங்களை காத்துக்கொள்ள மறைந்தனர். அப்பொழுது உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பாதுகாப்புக்காக வைத்திருந்த தனது கை துப்பாக்கியை எடுத்து குற்றவாளிகளை நோக்கி முட்டிக்கு கீழே வலது காலில் சுட்டவுடன் குற்றவாளி அந்த இடத்திலேயே தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு விழுந்து விட்டார். இதைத் தொடர்ந்து காவலர்கள் அவரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட வந்த துணை ஆணையர் சதீஷ் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் இடையே பேசும்போது கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை தீவிர விசாரணை மேற்கொண்டதில் தன்னிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்ததாகவும் ஒரு துப்பாக்கி கடந்த மாதம் கொலைக்கு பயன்படுத்தியது என்றும் மற்றொரு துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி பகுதியில் கரட்டும் மேடு என்கின்ற மலைக்கு பின்புறம் ஒழித்து வைத்திருக்கிறது தகவல் தெரிவித்து இருந்தார் அந்த தகவலை தொடர்ந்து இன்று காலை உதவிய ஆய்வாளர்கள் இருவர் தலைமையில் சிறப்பு தனிப்படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்காக குற்றவாளியை நேரடியாக அழைத்து வந்தனர் துப்பாக்கி பறிமுதல் செய்ய முற்படும்போது குற்றவாளி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உதவி ஆய்வாளர்களை நோக்கி சுடும் முயற்சி செய்தார் இதை தொடர்ந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தனது துப்பாக்கியின் மூலம் குற்றவாளியின் உடைய வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டுள்ளார் இதைத்தொடர்ந்து குற்றவாளி அப்பகுதியில் தப்பிக்க முடியாதபடி காலில் காயம் ஏற்பட்டதால் அதே இடத்தில் கீழே விழுந்துள்ளார் அவரை உடனடியாக காவல்துறையினர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி குற்றவாளிடம் விசாரணையின் போது பீகாரிலிருந்து வாங்கியதாக தகவல் தெரிவித்து இருந்தார் என்று காவல் துணை ஆணையர் தெரிவித்தார். தற்போது குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வேறு ஏதேனும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது இந்த துப்பாக்கியை மட்டும் அல்லாமல் வேறு பொருட்கள் அவர்களுடைய நண்பர்களிடத்தில் உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

52வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது நவீன்’ஸ் கட்டுமான நிறுவனம் :

சென்னை : மேடவாக்கத்தில் 52வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையே பாதுகாப்பான கட்டுமான நடைமுறைகளின் அம்சங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களை அங்கீகரித்து கவுரவிக்கும் விதமாக, நவீன்’ஸ் கட்டுமான நிறுவனம் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர், இதில் 300க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் முன்னிலையில், பணியிடத்தில் பாதுகாப்பு குறித்தும் கட்டுமானத் தளங்களில் ஏற்படும் விபத்துகளின் அபாயத்தைத் தடுப்பதையும் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, சென்னையின் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW)- இணை இயக்குநர் திரு மணி சங்கர், மேடவாக்கம் காவல் ஆய்வாளர் மற்றும் தீயணைப்பு ஆய்வாளர், ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பின் நெறிமுறைகளைப் பேணுவதாக உறுதிமொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து சிறப்பு மைம் நிகழ்ச்சியும், தொழில் சார்ந்த இடங்களில் பாதுகாப்பின் சாரத்தை நினைவு கூறும் வகையில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது, தமிழக கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக கனிம வளங்களை கடத்துவதை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் செங்கோட்டையில் 50க்கும் மேற்பட்டோர்கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.தமிழக கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினம்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கடத்துவதை கண்டித்து பல்வேறு கட்டமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்த்தின் போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி : குமார வயலூர் முருகன் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி. திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக உள்ள பிரபு, ஜெயபாலன் நியமனம் ரத்து செய்திருக்கிறது. இந்த தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது. பொதுக்கோவிலில் பிராமணர் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்ற விதி முழுக்க முழுக்க அரசியல் சட்டத்திற்கு எதிரானது. கருவறை தீண்டாமையை ஊக்குவிக்கும் தீர்ப்பாக உள்ளது. பிராமணர் தான் அர்ச்சராக இருக்க வேண்டும், பிறப்பு, சாதியை அடிப்படையாக கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிறப்பின் அடிப்படையில் இரண்டு அர்ச்சகர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கருவறை தீண்டாமை. இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. அரசியல் சாசன அடிப்படை சட்டத்தை மீறும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலில் தமிழர்கள் வழிபடக்கூடாது என்று சொல்வது சரியா?கோவில் சிலையை பிராமணர் தவிர வேறொருவர் தொட்டால் தீண்டாமை எனக்கூறும் விதத்தில் இந்த தீர்ப்பு உள்ளது. சாதி அடிப்படையில் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். சாதி, பிறப்பு, பழக்கம், வழக்கம் என்ற கோட்பாடு அடிப்படையில் அர்ச்சகர் நியமனத்தை கோர முடியாது என அரசாணை வெளியிட வேண்டும்.

நெல்லை : ராதாபுரம் பகுதியில் கல்குவாரிகளை பார்வையை சென்றால் கல்குவாரியில் இருப்பவர்கள் திமுக எம்பி ஞான திரவியம் குவாரி என மிரட்டுகிறார்கள். மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என கூறிவிட்டு தற்போது மின்வாரிய துறை ஸ்லாப்பை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்கள் அல்ல அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் மிகப்பெரிய பாறாங்கல் விழுந்து நான்கு பேர் இறந்தனர் இதில் நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டனர் பலர் காயமடைந்தனர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரக்கூடிய சூழ்நிலையில் கல்குவாரி சம்பவம் என்பது நடைபெற்று வந்தது. இதன் பிறகு தமிழக முழுவதும் கல் குவாரிகளில் ஆய்வு செய்தனர் 300 கோடி ரூபாய் அபராத விதிக்கப்பட்டது அதன் பிறகு தற்போது கல்குவாரிகளில் விதிமுறைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அனுமதிக்கப்பட்ட பரப்பளவை தாண்டி குவாரி அமைப்பது அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட கற்கள் எடுப்பது வெடி வைப்பது உள்ளிட்டதை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது தற்போது கல்காரிகளில் மிக பயங்கரமாக வெடி வைப்பது மூலமாக அதன் அருகில் உள்ள வீடுகள் பாதிக்கிறது குழந்தைகள் பாதிக்கிறார்கள் பொது இரவு நேரங்களில் பாறைகளுக்கு அதிகமாக வெடி வைப்பது மூலம் மக்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது இதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரிய அளவில் இல்லை மாவட்டத்தில் 55 கோரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதில் 52 கோரிகள் செயல்பட்டு வருகிறது 19 குவாரிகள் மூன்றில் ஒரு பங்கு ராதாபுரம் அருகே உள்ள இருக்கன் துறை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஒரு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 19 குவாரிகள் செயல்பட்டு வருகிறது இது மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது கடந்த மாத பத்தாம் தேதி பல்வேறு கிராமங்களை குவாரிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம் தோண்டப்பட்ட மண் அனைத்தும் அருகில் உள்ள குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது கல்குவாரி உரிமையாளர்கள் தொடர்ந்து இருக்கும் வரை பகுதியில் உள்ள பொதுமக்கள் மிரட்டி வருகிறார்கள் இதனால் வயல்வெளிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் குடிநீர் விளைநிலங்கள் மாசுபடுகிறது டாரஸ் லாரிகளில் 60 டன் 70 டன் என கற்கள் வெளி மாநிலங்களுக்கான கடத்தப்பட்டு வருகிறது நாங்கள் அந்த கல்குவாரிகளை ஆய்வு செய்ய சென்றபோது அங்கு இருந்தவர்கள் இது திமுக எம்பி ஞான திரவியத்தின் கல்குவாரிகள் உள்ளே யாரும் வரக்கூடாது என மிரட்டுகிறார்கள் தொடர்ந்து இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். நெல்லை மாவட்டத்தில் அதிகமாக கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது இந்த கல்காரிகள் யாருடையது யார் இதற்கு பினாமியாக இருக்கிறார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் இதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபையில் எடுத்துக் கூற உள்ளோம் அதன்பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது தமிழகத்தில் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மின்சார துறை அமைச்சரும் அதிகாரிகளும் தெரிவித்தனர் ஆனால் தற்போது ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது இது முற்றிலும் மின்சாரத்துறை தமிழக மக்களை ஏமாற்றி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளார்கள் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக கடுமையாக கண்டனத்தை தெரிவிக்கிறது என அவர் தெரிவித்தார்.