திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 2.100 கஞ்சா, செல்போன் பறிமுதல் – ஐ.ஜி.தனிப்படையினர் நடவடிக்கை:

திண்டுக்கல் அருகே செம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் செம்பட்டி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேடப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பனை செய்த ஆனந்தகுமார்(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தவசி மேடை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, சிவகங்கை திருச்சி திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் 150 மாடு பிடி வீரர்கள் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது.