மதுரை: மேலூர் அருகே தும்பைப்பட்டியில் நான்கு வழிச்சாலையில் கருங்காலக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மேலூர் வந்த செவிலியர் வெள்ளையம்மாள் என்பவரிடம் 4 பவுன் தாலிச்செயின் பறிப்பு. இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கைவரிசை. மேலூர் போலீசார் விசாரணை.

கடலூர்: விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து திருடிய திருடன் சாமிக்கு பயந்து மீண்டும் பணம் மற்றும் சில்லரை காசுகளை கோவில் மேற்கூரையில் வீசி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை.

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் பிறந்தநாள் கொண்டாட்டம் – பழங்கள் வழங்கி மகிழ்ந்த திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள். ஆண்டாள் யானை 45வது வயதை எட்டும் நிலையில், திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்தநாள் விழா இன்றுமாலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கோவில் யானை ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, மேலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் வகை,வகையான பழங்களை வழங்கியதை ஆண்டாள் குஷியுடன் சாப்பிட்டு மகிழ்ந்தது. தொடர்ந்து யானை ஆண்டாள் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தது.

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே டாடா ஏஸ் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து:- சென்னை லயோலா கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு:- 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம். கிராமம், கிராமமாக விழிப்புணர்வு நாடகம் நடத்துவதற்காக லயோலா கல்லூரி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. ஆலம்பாடி என்ற இடத்தில் வந்த போது டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லயோலா கல்லூரி மாணவர் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்து காரணமாக விழுப்புரம் – திருக்கோவிலூர் இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

அரியலூர்: ஜெயங்கொண்டம் – பல்வேறு மாவட்டங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது 21 வாகனங்கள் பறிமுதல். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் போலிசார் விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரம் புதுக்கோட்டை அரியலூர் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து 6 லட்சம் மதிப்பிலான 21 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

பெரம்பலூர்: நாட்டு சாராயம் விற்றவர் கைது – காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை லாரி டியூப்பில் விற்பனைக்காக வைத்திருந்த பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் வேலுச்சாமி (33) என்பவரை கைது செய்த, பெரம்பலூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், அவரிடமிருந்து சுமார் 300 லிட்டர் நாட்டு சாராயம் மற்றும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வேலுசாமி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

ராஜபாளையம்: சோலை சேரியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது குடி போதையில் சென்ற தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த கற்பகராஜ் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி – சடலத்தை கைப்பற்றி சேத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை.

நெல்லை: இருசக்கர வாகனத்தில் ஒருவர் உயிரிழப்பு இரண்டு பேர் படுகாயம் – வள்ளியூர் நான்கு வழி சாலையில் நெல்லையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வர்ணித்த நிலையில் வள்ளியூர் நான்கு வழி சாலை அருகில் வரும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி . வள்ளியூர் போலீசார் விசாரணை.

திருச்சி: அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்த சந்திரசேகர் என்பவர் பதவி துஸ்பிரயோகம், அடாவடி வசூல் என பல்வேறு வகையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது நடவடிக்கை குறித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகி சம்சுதீன் என்பவர் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியாவிடம் நேற்று காலை புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நேற்று இரவு சந்திரசேகர் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி: கடைவரம்பு நிலங்களுக்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் தண்ணீர் வழங்காததால் நெல் வயல்கள் முழு விளைச்சலை அடையவில்லை – கருகி வரும் பொதிர்களை காப்பாற்ற அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை படி பொதுப்பணித்துறையினர் இன்று முதல் 20 நாட்கள் தினசரி வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டு உள்ளது – இதனால் விவசாய்கள் உற்சாகம்.

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ரேஷன் கடையில் வாங்கிய ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதை கண்டுபிடித்த கருங்கல் பகுதியை சேர்ந்த ஒரு இல்லத்தரசி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது வைரல் ஆகி வருகிறது. பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு மறுபுறம் நாம் உண்ணும் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியை கலந்து மத்திய மாநில அரசுகளை தருவது நம்மை கொலை செய்வதற்கு சமம் என அந்த இல்லத்தரசி ஆத்திரத்துடன் பதிவு செய்துள்ளார்

திருப்பூர்: கேவிஆர் நகர் பகுதியில் அடுத்தடுத்த 4 கடைகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்து பணம்,மளிகை பொருட்கள் கொள்ளை.
பொதுமக்கள் அச்சம். நீண்ட நேரமாக மளிகைகடையில் அமர்ந்து கொண்டு ஜூஸ்,சாக்லேட்,கேக் சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். கொள்ளை சம்பவம் குறித்து மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை.

தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அம்பேத்கர் தெரு முகமது ரகமத்துல்லா சையது அகமது செவ்வாய்கிழமை சுட்டுக்கொலை. சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை முகமது ரகமத்துல்லா சையது அகமது கத்தியால் குத்தி உள்ளார். இதை எடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து இரண்டு போலீசார் அவரை நெருங்கி வந்தபோது. அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது. இதை எடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அகமது நெஞ்சில் இரண்டு துப்பாக்கி கொண்ட பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.இவர் 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டில் இறந்தவரின் அம்மா ஆமினா அம்மாள் மற்றும் அக்கா மசூதி மற்றும் மொகமது ஆகியோர் இருந்து வருகிறார்.இவரது அண்ணன் ஹபீல் சென்னையில் உள்ளார்.

செங்கல்பட்டு:

ஏழு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை. மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (27). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு இவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாலாஜி மீது சுமர்த்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறிவியல் பூர்வமாக உறுதியானதால் அவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லையில், வழிப்பறி வழக்கில், ஜாமினில் வெளியே வந்த கொள்ளையர், பேக்கரி கடையை உடைத்து, திருட முயன்றார். பொதுமக்களால்கையும் களவுமாக பிடிபட்டார். இவர் மீது 60 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை நீதிமன்றத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அவர், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்கு மண் ஏற்றி சென்ற லாரி சாலையில் சாய்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு :

விழுப்புரம் நாகை இடையே நான்குவழிச்சாலை பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி பகுதிகளில் நடைபெற்று வருகிறது , சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி சென்ற லாரி சீர்காழியிலிருந்து சூரக்காடு செல்லும் வழியில் நத்தம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் குறுக்கே கவிழ்ந்து விபத்தானது மன்னுடன் சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரவத்தை சீர்செய்யும் பணியில் ஈடுட்டனர், மேலும் நான்கு வழிச்சாலை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: முப்பது நொடியில் 12-காண்கிரீட் கற்களை காலால் உடைத்து சென்னையை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் தேக்ஹோண்டாவில் இந்தியாவுக்காக 5-தங்கப்பதக்கம், தமிழகத்திற்க்காக 10-தங்கப்பதக்கங்களை வென்றும் சாதனை புரிந்துள்ளார்.

சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடியில் இயங்கி வரும் ஒஎம்ஆர் தேக்ஹோண்டா தற்காப்புக்கலை அகாடமி மூலம் பயிற்ச்சிப் பெற்று வரும் 26-வயதான உதயாக்குமார் என்ற இளைஞர் 30-நொடிகளில் 12-காண்கிரீட் கற்களை காலால் உடைத்து இதுவரை யாரும் முறியடிக்காத ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உதயகுமாரின் இந்த புதிய உலக சாதனையை பாராட்டி லண்டனில் இருந்து உலக கின்னஸ் சாதனை சார்பில் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கியுள்ளனர். உதயக்குமார் இதற்க்கு முன்பு இரண்டு உலக சாதனைகள், இந்தியாவுக்காக 5-தங்கப்பதக்கம், தமிழ்நாட்டுக்காக 10-தங்கப்பதக்கங்களை தேக்ஹோண்டா தற்காப்புக்கலை மூலம் பெற்று பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து நிதியில் பெரும் அளவு ஊழல் நடப்பதாக கூறி வாயில் கருப்பு துணி கட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள். சங்கரன்கோவில் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்தும் பஞ்சாயத்து நிதியில் பெரும் அளவு ஊழல் நடப்பதாகவும் கூறி பட்டாடைகட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தின் போது வாயில் கருப்பு துணியை கட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வார்டு உறுப்பினர்களால் பரபரப்பு.

திருச்சி: சமயபுரம் அருகே கள் விற்ற ஒருவர் கைது – 150 லிட்டர் கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் – வட்டாட்சியர் சக்திவேல் முருகன் நடவடிக்கை.சுங்கச்சாவடி அடுத்து உப்பாற்று பாலம் அருகே மாணிக்கபுரம் சாலையில் கள்ளத்தனமாக கள் விற்ப்பதாக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனுக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து 150 லிட்டர் கள் மற்றும் கள் விற்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல். கள் விற்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜன் கைது செய்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி: கச்சதீவு அருகே ஆழ் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த கன்னியாகுமரி மாவட்ட விசைபடகு மீது ஹாங்காங் நாட்டு சரக்கு கப்பல் மோதி பலத்த விபத்து – விசைப்படகு சேதம் – படகில் மீன் பிடித்து கொண்டு இருந்த ஒன்பது மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர் உயிருக்கு போராடி கொண்டு கடலில் தத்தளித்து கொண்டு இருந்த மீனவர்களை அப் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த சக மீனவர்கள் காப்பற்றி தேங்காய்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து கொண்டு இருகின்றனர் – நாளை இரவு கரை வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

உயர்நீதி மன்றம் மதுரை கிளை: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணியாளர்களை தனியார் நிலத்தில் வேலை பார்க்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு. வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது – அரசு தரப்பில் தகவல். தென்காசி மாவட்டம் தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்ற மறுத்த மினி பேருந்து ஓட்டுனர் மீது ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் திமுக பிரமுகர் கொலை வெறி தாக்குதல். பேருந்து ஓட்டுனர் அரசு மருத்துவமனையில் அனுமதி. தும்பேரி நான்கு வழி சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை மினி பேருந்து மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்தது மூட்டைகளை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனர் நாகலிங்கம் என்பவர் மீது தும்பேரி ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் திமுக பிரமுகருமான குமார் மற்றும் அவருடைய அடியாட்கள் கொலை வெறி தாக்குதல். படுகாயம் அடைந்த நாகலிங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. அம்பலூர் போலீசார் விசாரணை.

தஞ்சை: கச்சமங்களத்தில் சுமார் 500 ஏக்கர் மேல் சம்பா நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது. விளைநிலங்கள் பாலைவனம் போல் வெடித்து வருவதால் கல்லணையில் இருந்து கச்சமங்களம் பிள்ளை வாய்க்காலில தண்ணீர் விட்டு கருகிவரும் சம்பா பயிர்களை காப்பாற்ற அரசு உத்வ வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி: விமான நிலையத்தில் 12 மணி நேரமாக காத்திருக்கும் பயணிகள் – விமான ஊழியருக்கும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கடும் வாக்குவாதம். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வரவேண்டிய ஏர் ஏசியா விமானம் நள்ளிரவு 2 மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு புறப்பட தயாரான நிலையில் இயந்திர கோளாறு காரணமாக விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் 220 பயணிகள் அவதி அடைந்தனர். இதை அடுத்து அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்வதற்காக வரவழைக்கப்பட்டு தற்போது இயந்திர கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை அடுத்து மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருச்சியில் இருந்து பயணிகளுடன் மலேசியா நோக்கி செல்ல விமானம் தயாராகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 220 பயணிகளில் 180 பேர் 12 மணி நேரத்திற்கு மேலாக விமானத்தில் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் அவதி அடைந்துள்ளனர். பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் சரியான தகவல்களை விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்காத காரணத்தினால் விமான நிலைய பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

கோவை: அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மின் மயானத்திற்கு எதிரே கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் 5 ஏக்கருக்கும் மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்த தோட்டம் சாலை ஓரம் இருப்பதால் அப்பகுதியில் சென்ற சிலர் புகை பிடித்து விட்டு தீக்குச்சியை தோட்டத்து பகுதியில் வீசி சென்றதாக தெரிகிறது. இதனால் கரும்புக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்து சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் தீக்கிரையாயின. இதனால் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாயின. தீ கொளுந்துவிட்டு எரிந்ததில் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் அன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கரும்பு காட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி: முன்னாள் ராணுவ வீரர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது – மணப்பாறை  அருகே உள்ள கத்திக்காரன்பட்டி உடையாபட்டி சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்றபோது அந்த வழியாக வந்த டி.என்.பி.எல் ஆலையில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் முன்னாள் ராணுவவீரர் தாமஸ் ஜான்பிரிட்டோ என்பவரது இருசக்கர வாகனம் மேச்சலுக்கு சென்ற ஆடுகளின் மீது மோதியுள்ளது. இதில் ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜகுமாருக்கும், தாமஸ் ஜான்பிரிட்டோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்கு இணையதளத்தின் மூலம் வாங்கிய துப்பாக்கியுடன் சென்று துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து ராஜ்குமார் மணப்பாறை  காவல் நிலையத்தில் அளித்துள்ள  புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது கொலை மிரட்டல் ஆயுதங்களை வைத்து காட்டி செய்ததாகவும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரி கைது செய்தனர்.

திருநெல்வேலி: பதவி உயர்வு பெற்ற தலைமை காவலர்கள் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு பாராட்டு. தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு தலைமைக் காவலராகவும், 10 ஆண்டு காலம் பணி பூர்த்தியானவர்களுக்கு முதல் நிலைகாவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 59 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் உட்பட 72 முதல் நிலை காவலர்கள் தலைமை காவலர்களாகவும், 164 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் உட்பட 196 இரண்டாம் நிலை காவலர் பதவியிலிருந்து முதல் நிலை காவலராக பதவி உயர்வு அளித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற 72 தலைமை காவலர்கள் மற்றும் 196 முதல் நிலை காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், .,* வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு வருங்காலங்களில் மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

நெல்லை: கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கங்கைகொண்டான் பழைய பைபாஸ் ரோட்டில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஆறுமுகம் * தலைமையிலான காவல்துறையினர் 28.02.2023 அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடம்பூர், சிவலிங்கபுரம், நடுத்தெருவை சேர்ந்த மாரிமுத்து (29),* குப்பகுறிச்சியை சேர்ந்த கண்ணன் (46)* ஆகிய இருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் இருவரையும் கங்கைகொண்டான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி * வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரிமுத்து, கண்ணன் ஆகிய இருவரையும் 01.03.2023 இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிராம் கஞ்சாவையும், இரண்டு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை தனியார் நிறுவனத்திற்க்கு சொந்தமான சொகுசு பேருந்து புதிய வாகனம் கோயம்புத்தூரில் புதியதாக பேருந்து பாடி கட்டிக்கொண்டு இன்று அதிகாலை 4.0மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து சொகுசு பேருந்து பயணிகள் யாரும் இல்லாமல் சென்னை நோக்கி வரும்பொழுது மேட்டுப்பாளையம் என்ற இடத்தில்வந்த பொழுது டயர் டயர் தீ வாடை வருவதாக பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பார்க்கும் பொழுது பின் பகுதியில் வந்த புகை சிறிது நேரத்தில் இந்த சொகுசு பேருந்து திடீர் என தீப்பிடித்து எறிந்ததுஉடனே
தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 28, இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். பொது இடத்தில் துணி துவைப்பதில் கடந்த பிப்.8ம் தேதி ஏற்பட்ட தகராறில் தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி, 55, அவரின் உறவினர்கள் தாக்கியதில் கடந்த பிப். 14ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் வேலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு செய்து, பின்னர் என்.தட்டக்கல் கிராமத்தி உள்ள புறம்போக்கு நிலத்தில் இடத்தை தேர்வு செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி: கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைதார். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதியபேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் எந்தியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பெங்களூர் சாலை வழியாக நகரின் முக்கிய சாலைகளில் சென்று பழையப்பேட்டை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் பொதுமக்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் பாரம்பரிய பம்பை இசை முழங்க மயிலாட்டம் ஒயிலாட்டம் குச்சி கால் நடனம் குழுவினர் நடனமாடியபடி பேரனை முன்னடத்தி சென்றனர்,இதில் அரசு அலுவலர்கள் காவல்துறையினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி: துறையூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த 15 நிமிடம் வாகனம் நிறுத்தும் போராட்டம் ஆனது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. அவர்கள் தங்கள் கோரிக்கைகளாக ஒன்றிய அரசும் மாநில அரசும் அதீதமான தண்டனை ஆன்லைன் அபராதம் போன்றவற்றை கைவிட வேண்டும்,புதிய வாகனங்கள் வாங்க அரசு மானியம் வழங்குவதுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய்ய வேண்டும், தொழிலை முறைப்படுத்த ஆட்டோ டாக்ஸி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை 15 நிமிடம் நிறுத்தி வைத்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.