உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியாற்றவிருக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கேப்டன் ஷிவா சௌகான் பெற்றுள்ளார்.
பொங்கல் பரிசு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை: திட்டமிட்டபடி ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் பெரியகருப்பன் தகவல். பொங்கல் பரிசாக முழுகரும்பு வழங்க அரசு உத்தரவு: கள்ளக்குறிச்சியில் விவசாயிகளிடமே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அத்துமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது; நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.
– சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
காஞ்சிபுரம் : பிரபல பட்டு ஜவுளி ‘ஏஜி பாபு சா’ கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
வத்தலக்குண்டு: அருகே பட்டிவீரன்பட்டியில் சொகுசு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை.
சேந்தமங்கலம் பகுதியில் ஆட்சியர் ஸ்வரன் குமார் அதிகாரிகளுடன் சென்று, கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்
புதுக்கோட்டை: மாவட்டத்தில் சாதிய பாகுபாடு சம்பவம் தொடர்பாக கறம்பக்குடியை சுற்றிய 9 கிராமங்களில் உள்ள 9 கோயில்களில் கோட்டாட்சியர் முருகேசன் ஆய்வு. முள்ளங்குறிச்சி மாரியம்மன் கோயில், திருமணஞ்சேரி சுகந்த பரமேஸ்வரர்.
சென்னை நுங்கம்பாக்கம்: ப்ரொபஷனல் கொரியர் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; பிற கிளை அலுவலகங்களிலும் சோதனை நடக்கும் நிலையில் கொரியர் அனுப்பும் பணிகள் நிறுத்தம்.
ஈரோடு: கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
மதுரை: ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது!
திருப்பரங்குன்றம்: கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது!
கொடைக்கானல்: மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களால் கைது.
புதுச்சேரி: மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்க்கை, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்; 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது!
கடந்த 2011ம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை இளநிலை உதவியாளர் லோகநாதன், பிறப்பு சான்றிதழ் வழங்க ₹500 லஞ்சம் பெற்றதாக கைது.
12 ஆண்டுகள் விசாரணை நடந்த நிலையில், லஞ்சம் வாங்கியது உறுதியானதால் 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹40,000 அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு,போலீசாரை தாக்கிய பெண்.
உறவினர்களிடம் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், போலீசாரை தாக்கிய செந்தாமரை என்ற பெண்,காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை.
புதுக்கோட்டை: அடுத்த சிப்காட் துணை மின் நிலையத்தில், மின் டிரான்ஸ்ஃபார்மரில் பயங்கர தீ விபத்து!தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கோவை வழியாக கடத்த முயன்ற சுமார் 200 கிலோ கஞ்சா பிடிபட்டது. வாளையாறு கலால்துறை சோதனைச் சாவடி அருகே, மீன் லோடு வண்டியை சோதனை செய்தபோது, மீன் லோடுகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு.
திண்டுக்கல்: மாவட்டம் வேடசந்தூரில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளை செத்துப் போ என்று திட்டும் கணித பாட ஆசிரியை பெற்றோர்களுடன் மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார்.!
Leave A Comment