சின்னம்மாவிடம் தவறாக கூறி தவழ்ந்து சென்று பதவி பெற்று நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: 

வாணியம்பாடியில் நடைபெற்ற ஓ.பி.எஸ் தரப்பு மாவட்ட செயல்வீர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு பரபரப்பு பேச்சு.

திருப்பத்தூர் மாவட்ட ஓ.பி.எஸ் தரப்பு செயல்வீரர்கள் கூட்டம் வாணியம்பாடியில் நகர செயலாளர் கோபிஷங்கர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்து கொண்டார்.

அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 200 பேர் தங்களை ஒ.பி.எஸ் தரப்பு கட்சியில் இணைத்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு.

வன்னியர்கள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதம் செல்லாது என்று தெரிந்தும் அதை சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து தென்னாட்டு மக்களையும்,அவருடைய சமூக மக்களையும் ஏமாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓ பன்னீர் செல்வம் குறித்து சின்னம்மாவிடம் தவறாக கூறி ஒபிஎஸ் ஐ ராஜினாமா செய்ய வைத்து தவழ்ந்து சென்று சின்னம்மாவிடம் பதவியை பெற்று நம்பிக்கை துரோகம் செய்து விட்டு இப்போது இல்லை என்று மறுக்கிறார்.

சூரியனை பார்த்து ஏதோ ஒன்று குறைத்தது போன்று சின்னம்மாவை குறை சொல்கிறார்.

சின்னம்மாவிடம் எடப்பாடி பழனிச்சாமி பதவியும் பெற்றுக்கொண்டு 4 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு கொடா நாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை மெதுவாக செல்லும் வகையில் தற்போது திமுகவுடன் கூட்டு சேர்ந்து பீ டீமாக செயல்ப்பட்டு கொண்டு இருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம் திமுகவின் பீ டீம் என்று கூறுகிறார். திமுகவின் பீ டீம்
எடப்பாடி பழனிச்சாமியா? இல்லை ஒ பன்னீர் செல்வமா? என்று பேசினார்.
இதில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.