பழனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவபொம்மை எரிப்பு. அருந்ததி இன மக்களை வந்தேரிகள் எனக்கூறியாதாகவும், அதைக்கண்டித்து பழனி பேருந்து நிலையம் முன்பு சீமானின் உருவபொம்மையை, தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டம்..

மக்கள் நீதி மய்யம் நாளை, 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது; இதனை கொண்டாட, கட்சியை வலுப்படுத்த அனைத்து கிராமங்களிலும் கொடியை கொண்டு சேர்க்க, தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.

நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை””கை சின்னத்தில் மை வைத்தால் போதும், ஈரோட்டில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது”.ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! – கமல்ஹாசன் ட்வீட்.

அதிமுக சட்ட விதிகளை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவு சிதைத்து எடப்பாடி தரப்பு பொதுக்குழு நடத்தியது. சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்கு சென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.பழனிசாமி பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை, பெயரை கூறுவதற்கான தகுதியை கூட அவர் இழந்துவிட்டார். தனது இரும்புப்பிடிக்குள் அதிமுகவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு நாடகமாடுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு.

கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்”
-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து விரப்பன் சத்திரம் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

நான் சட்டமன்றத்தில் சொன்னேன், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என சொன்னார். ஆனால் இன்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நிற்கின்றனர்” -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள்” -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மார்ச் 1 – மாலை 5.00 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் விழா.தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது.– துரைமுருகன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5,6 தேதிகளில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின்.70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை.

“தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!”. “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! : உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!”. “தொன்மையும், காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்!”. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் – தமிழ்நாடு அரசு.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 5, 6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது. “தொழில்நுட்பமும் ஃபிண்டெக்கும் இன்று உலகை இணைத்து வருகிறது”. கொரோனா காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு உதவிகரமாகவும் இருந்தது – பிரதமர் மோடி.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்கீடு!சிவசேனா கட்சியின் பெயரும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 544 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்!. பதக்கம் பெறும் காவலர்களுக்கு மாத ஊதியத்தில் கூடுதலாக ₹400 வழங்கப்படும் என அறிவிப்பு.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை என தகவல், போலீசார் தீவிர விசாரணை.

போட்டித்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து, மாநில பணியாளர் தேர்வாணையத்தை கூண்டோடு கலைத்து இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு.

“இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை, பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்துள்ளோம், ஏனென்றால், பிரதமர் மோடி தடுப்பூசி கொடுத்துள்ளார்”. – கர்நாடகாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் பன்னீர்செல்வம் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராகி விடுவார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவன் உடன் சந்திப்பு.

ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அந்த அணியில் இருந்து விலகுகின்றனர். கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்து, அவரையும் திரும்பப் பெற்றதால் அதிருப்தி என தகவல்; செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு.

பிரதமர் மோடி வாயில பயங்கரமா வடை சுடுவாரு, ஆனா அந்த ஒரு வடையும் அதானிக்குதான் தருவாரு. பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசத்சுகு அசகாவா, டெல்லியில் பிரதமர் மோடி உடன் சந்திப்பு. இந்தியாவின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்ததாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களால் எங்களது திறமைகளை மோடி மற்றும் அமித்ஷா அளவுக்கு அடையாளம் காண இயலவில்லை” – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிப்பது குறித்த கேள்விக்கு கோவையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதில்.

சென்னை கிண்டியில் மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூலகமும் 18 மாத கால திமுக ஆட்சியில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது; மதுரை எய்ம்ஸில் இருந்து செங்கல் திருடி வந்ததாக ஒருவர் சொல்கிறார்; அவருக்கு வெட்கமாக இல்லை. – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

விசிக தலைவர் திருமாவளவனுடன் இயக்குநர் வெற்றிமாறன் சந்திப்பு.

குண்டு வைப்பதில் நாங்க வல்லவர்கள்; எங்களைச் செய்ய வைத்துவிடாதீர்கள்.. தமிழக அரசை எச்சரிக்கிறேன்” – பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பேச்சு.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் தலைவராக அறிவிப்பு. சமீபத்தில் சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இன்று அக்கட்சியின் கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கிறார். கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் கொலை செய்தது தொடர்பாக நேரில் புகார் அளிக்க திட்டம்.