4 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம், பாதிக்கப்பட்ட இளம் பெண் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி. செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த பெண்ணை மிரட்டி கடத்திச் சென்றதாக புகார்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பெண்ணை கடத்தி சென்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை, கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த திமுக நிர்வாகியின் மகன் கைது வீட்டில் பதுங்கி இருந்தவரை, அதிரடியாக மகளீர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளரான திமுகவைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்கி (22)(எ) விக்னேஷ் முதலில் பள்ளி மாணவியை பேச்சு வாக்கில் இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மதுபானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலத்காரம் செய்தார். அதன்பின்பு கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறபடும் நிலையில், திடிரென பள்ளியில் மாணவி மங்கி விழுந்த நிலையில் அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மாணவியை பறிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மூன்று மாதம் கர்பமாக இருப்பதாக மருத்தவர்கள் தெரிவிக்கபட்டதாக கூறப்பட்ட நிலையில்,மாணவியின் பெற்றோர்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து தலைமறைவாக இருப்பதாக விக்னேசை வலை வீசி தேடி வந்த நிலையில், தனது வீட்டில், மறைந்திருந்த நபரை துரிதமாக போலீசார் பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவி செய்து சிறையில் அடைத்தனர்.

4 பேர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் திடீர் திருப்பம் காதலனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் அழகுவேல் , இவரது மகள் அனுசுயா வயது 21 . இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைசியா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகின்றார். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வந்த அனுசுயா தன்னை 4 பேர் காரில் கடத்தி வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்ததால், காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

தன்னுடைய சக தோழியை சந்திக்க நேற்று இரவு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த 4 இளைஞர்கள் தன்னிடம் பேச்சு கொடுத்து கொண்டே காரில் கடத்திக் கொண்டு சென்றதாகவும்,தன்னை கடத்தி சென்ற நான்கு இளைஞர்களும் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

காவல் துறையினர் அனுசுயாவை அழைத்துக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனைக்காக உட்படுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் நமது செய்தியாளிடம் தெரிவித்ததாவது,அனுசுயா காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரை மூன்று மாத காலமாக காதலித்து வந்ததாகவும், சலீம் நேற்று திருமணம் செய்து கொள்கின்றேன் என கூறி அழைத்ததால் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வந்ததாகவும், ரயில்வே நிலையம் அருகே காத்திருந்த சலீமுடன் பைக்கில் மலையாங்குளம் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு வைத்து அனுசுயாவை சலீம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அனுசுயா தான் தயாராக வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சலீம்மிடம் கொடுத்து இந்த தாலியை உடனே நீ கட்டு என கூறியதாகவும், அதை சலீம் மறுத்ததாகவும் ,அதனால் அனுசுயா சத்தம் போட்டு அந்த பகுதி மக்களை கூட்டியதாகவும் , அப்பகுதி மக்கள் அனுசுயாவை அழைத்துக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் விட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.