மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர கடைகளை அகற்ற மாமல்லபுரம் பேரூராட்சி உத்தரவு.

ஜி- 20 மாநாடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், மகாபலிபுரம் கடற்கரை கோவில், அர்ஜுன தபசு, ஐந்து ரதம் , வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலையோர கடைகளை மூன்று நாட்கள் , அகற்ற உத்தரவு. ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய தேதிகளில் சாலையோரத்தில் செயல்படும் கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டில், கலந்துகொள்ள வரும் உலக பிரதிநிதிகள் பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் கைவண்ணத்தில் , செதுக்கிய கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இருப்பதால் அப்பகுதியில் சாலையோரம் உள்ள கடைகளை வைக்க கூடாது என பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.