டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பீகார் அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை ஜன.20ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு. விதிகளை மீறி பீகார் அரசால் நடத்தப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க கோரியும் வழக்கு தொடரபட்டது.
சென்னை: பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் கவரிங் நகை கடையில் பணியாற்றும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடை உரிமையாளர் ஜெயினுலாபுதீன் (42) என்பவரை அனைத்து மகளிர் போலீஸ் கைது செய்தது.
சென்னை: மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு செய்ய துடிப்பதா?: என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். குத்தகை முறையில் பணி நியமனம், பணியிடங்களை ரத்து செய்வது போன்றவற்றை கைவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை ஒட்டிய ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளாவிலிருந்து நாளை நிறைவடைகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜனவரி 15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரி பிடித்தால் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் என சேலம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் போது வாழப்பாடி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நரியாட்டம் நடத்துவது வழக்கம்.
தஞ்சை: தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலக பொருட்கள் மற்றும் வாகனத்தை ஏலம் விட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் கும்பகோணம் சார்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட சிறப்பு வட்டாட்சியர் மனு தொடர்பாக சுவாமிநாதன் என்பவர் 2 வாரத்தில் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.
கேரளா: மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் போர்டு அறிவித்துள்ளது.
சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பெற்றதாக 25 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
Leave A Comment