பொது

பொதுவான செய்திகள்

Rate this post

தூத்துக்குடி: கருங்குளத்தில் தனியார் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் வந்த கார்த்தி (20) என்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு வாலிபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கராத்தே 1 சீரியஸ் எ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரனாய் சர்மா படைத்தார்.

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுவதை ஒட்டி கானொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.

சென்னை: வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம் நோக்கி தாழ்வு மண்டலம் நகர்கிறது.

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று காலை சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்களை வரவேற்றனர். தமிழ்நாடு அரசு சொந்தமான வாகனம் மூலம் மீனவர்களை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நீலகிரி: உதகையில் உறைபனி தொடங்கியது. கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ். நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் பனிப்படலம் படர்ந்து காணப்படுகிறது. கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் தீபாவளி சீட்டு நடத்து ரூ.27 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மாலந்தூர் பகுதியை சேர்ந்த ஜே.பி.ஜோதி, மனைவி சரண்யாவை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைந்தனர்.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,905-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.67, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.50 உயர்ந்து 67.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடகா: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம்மைசூரில் இருந்து மங்களூருக்கு கைதான ஷாரிக் உடன் மற்றொரு நபர் பேருந்தில் பயணம் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.

Comment here