இந்தியாவுக்கு அங்கேரி நாட்டு தூதர் பார்த்தா சத்பதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகை:
கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து ரசித்தார்.இந்தியாவுக்கான அங்கேரி நாட்டு தூதர் பார்த்தா சத்பதி தனது மகளுடன் மாமல்லபுரத்திற்கு இன்று சுற்றுலா வந்தார். கடற்கரை கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த அங்கேரி நாட்டு தூதருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை சுற்றுலா வழிகாட்டி விளக்கி கூறினார். பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்ததோடு தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இறுதியில் ஐந்துரதம், அா்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை சுற்றிப் பார்த்தார் அவருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்தியாவுக்கான அங்கேரி நாட்டு தூதருக்கு எவ்வித போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment