சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக மூவர்ணத்தில் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்கும் விதமாக கைகூப்பி வணக்கம் செய்வது போலும், Happy Republic Day எனவும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பிற்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சோதனை அனைவரையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.