செயற்குழு தரப்பு வாதங்கள் நிறைவு/ ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தொடங்கியது.
பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர் – செயற்குழு தரப்பு.
ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? – நீதிபதிகள். ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரி்லே அவர் நீக்கப்பட்டார் – கட்சி தரப்பு.
புதுச்சேரியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக விஜய், அஜித் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவுஅண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக புகார். விஜய், அஜித் ரசிகர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு.
பழனி தொகுதி கொடைக்கானலில் ஆண்கள் கலைக்கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? – திமுக எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் கேள்வி. கொடைக்கானலில் புதிதாக ஆண்கள் கலை கல்லூரி தொடங்க எந்த தேவையும் இல்லை – அமைச்சர் பொன்முடி.
பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு.
காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் இந்தியா தலைமை தாங்கும் – ஆளுநர் ஆர்என் ரவி
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் காலதாமதம்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. ராணுவ அதிகாரிகள் 3 பேர் உயிரிழப்பு.
பெங்களூர் அருகில் உள்ள ஐபோன் கட்டமைக்கும் தொழிற்சாலையை வாங்குகிறது டாட்டா குழுமம்.
திருச்சி விமானநிலையத்தில் ஆண் பயணி ஒருவர் தோல் பையில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..சென்னை ஐஐடியில் மாணவர்களால் நடத்தப்படும் 28வது சாரங் விழா!
மாநிலத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்!
மதுரை பரவை பகுதியில் முத்துநாயகி அம்மன் கோவில் முன்பு நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.
தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு சாம்சன் நியமனம்.
அஜித்படமா, விஜய் படமா என விவாதம் நடத்துவது வேதனை – பாமக தலைவர் அன்புமணி
Leave A Comment