சேலம்: கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றது மனிதநேயமற்ற செயல், கடுமையாக கண்டிக்கத்தக்கது”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம். காணாமல் போன ராஜா என்பவர் தமிழக – கர்நாடக எல்லையான அடிப்பாளாறு காவேரி ஆற்றில் சடலமாக மீட்பு. மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மக்கள் கொந்தளிப்பு. கர்நாடக எல்லை சாலையில் போக்குவரத்து நிறுத்தம். பாலாறு சுங்கச்சாவடியில் பதற்றம். இருமாநில காவல்துறையினர் எல்லையில் குவிப்பு. கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சேலம் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிதியதவி – முதலமைச்சர் அறிவிப்பு. சேலம் மேட்டூர் அருகே பாலாறு பகுதியில் மீனவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு. கர்நாடக வனத்துறையால் மீனவர் கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார்; பதற்றமான சூழலால் எல்லையில் போலீஸ் குவிப்பு.