சென்னை : புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது கடந்த இரண்டு வருடமாக சாலை குண்டு குழியுமாக உள்ளதால் கடந்த 15 நாட்களில் இப்பகுதியில் சாலை சரியாக இல்லாததால் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் தாம்பரம் மாநகராட்சியிலும் பலமுறை மேரிடமும் மனு கொடுத்தும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த எஸ் ஆர் ராஜா அவரிடம் மனு கொடுத்தும் திமுக எம்பி டி ஆர் பாலு இப்பகுதியுடைய எம்பியாக உள்ள அவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த மூன்று உயிர் உயிரிழந்துள்ளனர் இதை கண்டித்து இன்று கிஷ்கிந்தா சாலையில் 200க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் குழந்தைகளுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் முடிச்சூர் குன்றத்தூர் சோமங்கலம் படப்பை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் ஓரகடம் ஆகிய பகுதி செல்லக்கூடிய வாகனங்கள் சாலை மறியல் ஒரு மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன பேச்சுவார்த்தையில் தற்போது காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி – திருச்சி : வழித்தடத்தில் இருப்பு பாதை பராமரிப்பால் மூடப்படும் ரயில்வே கேட் – பேருந்து வசதி தடைபடுவதால் கல்லூரி மாணவ , மாணவிகள் அவதி …மாற்று பாதையில் பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதால் சிரமம் …
குடியிருப்பு சாலைகளை சீரமைக்காமலும், சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்காத தமிழக அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து குடியிருப்பார் நலச்சங்த்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி : ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மஞ்சத்திடல் ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள 2 சுரங்கப் பாதை பாலம் அமைக்கும் பணியானது ரயில்வே நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு, 9 மாதமாகியும் பணி நடைபெறாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் 6-7கிமீ சுற்றிசெல்லும் அவலநிலை தொடர்வதுடன், ரயில்வே கோட்ட மேலாளர் இடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல் மகாலட்சுமி நகர் முதல் நாகம்மைவீதி வரை பிரதான சாலையை சீரமைக்க ஆட்சியாளர்களிடம் மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் பிறகும் சுரங்கப்பாதை மற்றும் சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 10-15 நாட்களுக்குள் மஞ்சத்திடல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
ராஜபாளையம் : நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்க மாவட்ட கவன ஈர்ப்பு பொது குழு கூட்டம் நடைபெற்றது – கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் தமிழ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என 17 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
எங்களது கோரிக்கையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. திமுகவைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களிடம் நாங்கள் வைத்த கோரிக்கைக்கு, பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களுக்கு திமுக அரசு தான் மீண்டும் பணி வழங்கியது. எனவே எங்களிடம் பணி நீக்க காலத்திற்கான ஊதியம் கேட்கக் கூடாது என்று பொய்யான தகவல்களை கூறுகிறார்.
ஆனால் எங்களுக்கு மீண்டும் பணி வழங்கியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நலன் சார்ந்த கோரிக்கையை பொய் சொல்லி புறந்தள்ளும் அமைச்சரின் செயலுக்கு சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.
எங்களது கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக கவன ஈர்ப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக வரும் 10 ம் தேதி அனைத்து நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலகங்கள் முன்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடைபெற உள்ளது. இதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் : புறவழிச்சாலையில் தடுப்புக் கட்டையில் மோதி டாடா ஏஸ் சரக்கு வாகனம் விபத்து:- ஒருவர் உயிரிழப்பு:- 3 பேர் படுகாயம்.
கோயம்பத்தூரை சேர்ந்தவர்கள் சென்னை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது டாடா ஏஸ் சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது. விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது. கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு:- படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
மதுரை : ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம்.சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகளுக்காக போடப்படும்
சர்வீஸ் ரோட்டிற்கு இடைஞ்சலாக உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது இதற்காக மேம்பாலத்தின் கீழே இரண்டு புறமும் போடப்படும் அணுகு சாலையானது அதாவது சர்வீஸ் ரோடானது ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறைந்த அளவில் போடப்படுவதாகவும் பாலப்பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது விபத்துகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வருவதில் சிரமம் இருப்பதாகவும், ஆகையால் சர்வீஸ் ரோட்டிற்கு இடைஞ்சலாக உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
விழுப்புரம் : புறவழிச்சாலையில் தடுப்புக் கட்டையில் மோதி டாடா ஏஸ் சரக்கு வாகனம் விபத்து:- ஒருவர் உயிரிழப்பு:- 3 பேர் படுகாயம்.கோயம்பத்தூரை சேர்ந்தவர்கள் சென்னை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது டாடா ஏஸ் சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது. விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது. கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு:- படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
நெல்லை : ஓடும் பேருந்தில் டிரைவர் தீடீரென மயக்கம், சாதுரியமாக நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் – மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டிரைவருக்கு குவியும் பாராட்டு.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பணிமனையை சேர்ந்த தடம் எண் 20- டி அரசு பேருந்து இன்று காலை சுமார் 11 மணி அளவில் பாவூர்சத்திரத்தில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றுக்கொண்டு பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டிக்கு சென்றது. வண்டியை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த சேசையா என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த பஸ் கடையம் அருகே வந்தபோது டிரைவர் சேசையாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சாதுரியமாக செயல்பட்ட அவர் பஸ்ஸை சாலை ஓரமாக நிறுத்தினார். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தொடர்ந்து நடத்துனர் கணேசன் உதவியுடன் சேசையாவை அருகில் இருந்த கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மாற்று பேருந்து மூலம் பயணிகள் சென்றனர். பஸ்சை சாதுரியமாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குனிந்து வருகிறது.
மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் சாவு :
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்திலிருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. செலவடை சென்ற பொழுது தாறுமாறாக ஓடிய லாரி சாலை ஓரம் சென்ற மூன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குட்டப்பட்டி மானத்தால் கிராமத்தைச் சேர்ந்த மாதையன் (30), சங்ககிரி கோலங்காட்டைச் சேர்ந்த காளியப்பன்(40), ஜலகண்டபுரம் வண்டி மேட்டை சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி (35) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையும் பலியாகி உள்ளது. மேலும் ஓமலூர் ராமி ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
லாரி ஓட்டுநர் மது அருந்தி இருந்ததாகவும் மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உடல்கள் மற்றும் மனித உறுப்புகள் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
விபத்து காரணமாக ஜலகண்டபுரம் தாரமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முகத்தை பார்க்க அருகில் இருந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கான கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு முருகன் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது திரு அமைச்சர் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார் இதனைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகம் இரண்டு நாட்கள் முன்பு சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவித்தது இதை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதனைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இதற்கான விழா நடைபெற்றது இவ்விழாவில் தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம் கால்நடை பால்வளம் ஸ்ரீ அமைச்சர் மாண்புமிகு எல் முருகன் அவர்கள் எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையம் அணிந்தடைந்தபோது குடியரசுத்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு தேஜா எக்ஸ்பிரஸ் வந்தபோது அந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு மதுரை புறப்பட்டு சென்றது அதனை மத்திய இணை அமைச்சர் குடிய சக்தி தொடங்கி வைத்தார் எதனைத் தொடர்ந்து ரயில் பயணிகளும் பொதுமக்களும் எழுப்பி வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெளிவுபடுத்தினர் மத்திய அமைச்சர் எடுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கும் தங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி ஆர் பாலு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி தாம்பரம் ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சாலையின் இறக்கத்தில் நியூட்டரில் சென்ற லாரி பிரேக் பிடிக்காமல் 4 பேர் மீது மோதி விபத்து :
ஒருவர் சம்பவ இடத்திலே பலி மற்றும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. தென்காசி மாவட்டம், தமிழக -கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரளா மாநிலம் ஆரியங்காவு வணிகவரி சோதனை சாவடி அருகே சாலையில் 4 பேர் ஓரமாக நின்று கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது.
அப்பொழுது, சாலை இறக்கத்தில் நியூட்டரில் லாரியை டிரைவர் இயக்கியுள்ளார். இதனால் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் உள்பட 4 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், கேரள மாநிலம் கரும்புதோட்டம் பகுதியை சேர்ந்த மாத்தாய் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சூழலில், மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்து வந்த தென்மலை போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாலைகளில் உள்ள இறக்கத்தில் வாகனங்கள் செல்லும் போது நியூட்டரில் செல்ல வேண்டாம் என போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Leave A Comment