திண்டுக்கல்லில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புனித உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு கொசவபட்டியில் 350 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கு பெறக்கூடிய மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இன்றைய நடைபயணம் தொடங்கியது; தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். கதுவாவில் தொடங்கிய நடைபயணத்தில் சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பங்கேற்றுள்ளார்.

பழனி: பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பழனி முருகன் கோயிலில் இருந்து இடும்பன் கோயில் வரை ரோப்கார் திட்டம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்து வருகின்றது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

சென்னை: ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம் – மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள் பிப்ரவரி 1ம் தேதி செங்கல்பட்டுக்கு வருகை தருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க ஒன்றிய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் செல்ல நேரிடும் என்பதால் மாமல்லபுரம் – கல்பாக்கம் சாலை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால் 330 மின் பகிர்மானப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை: ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட வேணுகோபால் தூத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

திருச்சி: லால்குடியில் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்ற புகாரில் தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை விற்ற தாய் ஜானகி, வழங்கறிஞர் பிரபு கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு குழந்தை காணாமல் போனதாக தாய் ஜானகி புகார் தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் 13 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் ஒப்பந்தம் எனும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை: இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சிபிசிஐடி போலீசார் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று தரப்பை சேர்ந்த 45 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 10 குழுக்களை சேர்ந்த 35 போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி: திருமணம் ஆனாலும் இளைஞர்கள் பெற்றோர்களை கைவிடக் கூடாது என ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சிறு வயதில் இருந்து தற்போது வரை உங்களுக்காக பெற்றோர்கள் பல தியாகம் செய்துள்ளனர் எனவும் ராமதாஸ் அத்வாலே கூறினார்.

சேலம்: நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை: மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில் 3 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ஜெயராமன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், திவாகர், ஸ்டீபன் ராஜ், பாலாஜி, ஹேமநாதன், தினேஷ் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை: முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. sdat.tn.gov.in இணையதளம் மூலம் லட்சக்கணக்கானோர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும். சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் நடைப்பயணத்தை தொடங்குகிறார். கடலூரில் அண்ணாமலை பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும், பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் பாஜக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்: ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாஜக செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடலூரில் அண்ணாமலை பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும், பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் பாஜக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல்புகார் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.வீரர்கள் விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா ,சஷி மாலிக் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் தாயார் ஒப்படைத்தார். விழுப்புரம் நீதிமன்றம் செல்போனை பெற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்து சிபிசிஐடியிடம் வழங்கினார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடியிடம் மாணவியின் தாயார் செல்போனை தந்தார்.

திருச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி செல்வமணிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி மகளிர் நீதிமன்றம். 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் சேகர் பாபு பழநியில் பேட்டி….பழனி மலை அடிவாரத்தில், கிரிவீதி பாதையில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக எல். இ. டி., டிவி 16 இடங்களில் பொருத்தப்பட உள்ளது . கும்பாபிஷேகம் அன்று ஹெலிகாப்டர் மூலம் கலசத்துக்கு மலர் தூவப்படும் குடமுழுக்கு விழா தமிழில் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கையை ஏற்ப பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்.

திண்டுக்கல்: மாவட்டம் நத்தம் கொசவபட்டி ஜல்லிக்கட்டு விழா 4 மணியுடன் நிறைவேற கூடிய ஜல்லிக்கட்டு விழா 2.10 மணி அளவில் விதிமுறைகளை பின்பற்றாததால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஜல்லிக்கட்டு விழாவை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த ராம்பால், சந்தீப் குமார் ஆகியோர் உயிரிழப்பு. மதுரை அரசு மருத்துவமனையில் இருவரும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் எண்ணிக்கை பொய்யானது – எடப்பாடி பழனிச்சாமி. ஒருவர் பெயரை 3 வலைத்தளங்களில் மாற்றி, மாற்றி நுழைத்து பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அரைவேக்காட்டுத் தனமாக, பதில் தந்து கொண்டுள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கும் படங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? – எடப்பாடி பழனிச்சாமி.இன்றைக்கு 150 படங்கள் வெளியிட முடியாமல் பெட்டிகளில் முடங்கி கிடக்கிறது. அதற்கு காரணம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். அரசு அனுமதியின்றி தினசரி 5 காட்சிகள் இந்நிறுவனத்தின் படங்களை வெளியிடுவது எப்படி?

திண்டுக்கல்: அருகே ஆர் டி ஓ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட 2 பேர் கைது, கார் பறிமுதல். திண்டுக்கல் திருச்சி பைபாஸ் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் என்று வாகன சோதனையில் ஈடுபட்ட கோபால்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(44), மதுரையை சேர்ந்த சதீஷ்குமார்(31) ஆகிய இரண்டு பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு குளக்கரை மாரியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்று 48 நாட்கள் மண்டல சிறப்பு பூஜை நடைபெற்று, இறுதி நாளான இன்று காலை கோமாதா பூஜை, கணபதி பூஜை, யாகசாலை பூஜை மற்றும் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை செய்து பக்தர்கள் இறைவனை வழிபட்டனர் மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இக்கோவில் நிர்வாக சார்பில் தலைவர் பக்தவச்சலம் என்கின்ற குமார் செயலாளர் மோகனரங்கன் பொருளாளர் சியாம் சுந்தர் மற்றும் ஆன்மீகச் செம்மல் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.