சென்னை விமான நிலையம்:
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் பயணமாக சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார் அவரை கவர்னர் திரு ஆர் எம் ரவி முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி கே வாசன் மற்றும் தமிழக அமைச்சர்கள் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழ் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.
சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை அடுத்து கிண்டி கத்திபாரா, சென்னை விமான நிலையம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: பிரதமர் வருகையையொட்டி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் முதல் நீலகிரி மாவட்டம் மசினகுடி எலி பேட் வரை வாகன பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாளை முதுமலை புலிகள் காப்பக திட்டத்தின் 50-வது ஆண்டு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திலிருந்து, தமிழக எல்லையான கக்கநல்லா சோதனை வழியாக தெப்பக்காடு மற்றும் ஹெலிகாப்டர் தளம் இருக்கும் மசினகுடி வரை காவல் துறையின் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது.
இதனால் தொரப்பள்ளி – மைசூர் மற்றும் மசினகுடி – மைசூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.இதனிடையே, மசினகுடி. தெப்பக்காடு மற்றும் தொரப்பள்ளி, பந்திப்பூர் ஆகிய பகுதிகள் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
Leave A Comment