அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

கொரோனா பாதிப்பு: உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு சீனாவுக்கு WHO வலியுறுத்தல்.

காஞ்சிபுரம்: உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.

திருவல்லிக்கேணி: காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கர்நாடக மாநில நபர் கைது.

மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 உறுதி:
மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி. அமெரிக்காவில் இருந்து வந்த 4 பேருக்கு தொற்று உறுதி – மாநில சுகாதாரத்துறை அமைச்சகம்.

பல்லடம்: காதலியை தீ வைத்து எரித்த காதலன். திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீ வைத்து எரித்த காதலன் போலீசார் தேடியதை அறிந்து உடல்நிலை சரியில்லை என கூறி அரசு மருத்துவமனையில் அனுமதி.

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிக்கல் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதியதில் நாகையை சேர்ந்த இப்ராஹிம், ஆஷிக் இருவர் உயிரிழப்பு கீழ்வேளூர் போலீசார் விசாரணை.

ஆவடியில் செங்களால் தாக்கி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் 1,54,000 வழிப்பறி.

வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். வடமேற்கு மாநிலங்களில் மூடுபனி ஏற்படும் என்றும், இதனால் கடுமையான குளிர் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:
வடமாநிலங்களில் தற்போது குளிர் காரணமாக அதிக அளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், காஷ்மீர், லடாக் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் மூடுபனி ஏற்படும் என்றும், இதனால் கடுமையான குளிர் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடும் குளிர் அலை வீசும் என்பதால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
– சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம்:

பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று நடைபெறுகிறது. ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 5,486 பணியிடங்களுக்கான எஸ்பிஐ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடக்கிறது.

செங்கரும்பு கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்ட 72 கோடியும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வற்புறுத்தல்.

சேலம்: சேர்வராயன் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் நுரை பொங்க காட்சியளிக்கும் ஆறு; இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை!

கோபிச்செட்டிபாளையம்: அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம். தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பழவேற்காடு: – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மணல் திட்டாக மாறிய சாலை; 2 அடி உயரத்திற்கு கடல் மணல் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.

கடல் கொந்தளிப்பு காரணமாக முகத்துவராப் பகுதியில் கடல் நீருடன் மணல் அடித்துவரப்பட்டுள்ளது.

SI யிடமே மொபைல் திருட்டு தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளரின் செல்போன் மாநகர பேருந்தில் திருட்டு; கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாவின் மணல் சிற்ப போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷர்மிளா முதல் பரிசை தட்டிச் சென்றார்!

சென்னையில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடங்களில், 20 கூடுதல் பேருந்தை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என விழுப்புரத்தில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்.

பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேங்காய்க்கு பதிலாக இளநீர் வழங்கியதால் சிரிப்பலை.

மயிலாடுதுறை – திருச்சி பயணிகள் ரயிலின் எஞ்சின் திட்டை ரயில் நிலையம் அருகே பழுதானது. மாற்று எஞ்சின் கொண்டுவரப்பட்டு தஞ்சை நோக்கி ரயில் புறப்பட்டது; ஒருமணி நேரம் ரயில் தாமதம்.

தேங்காய் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த கோரி கையில் தேங்காயுடன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அமைச்சரை மீட்டனர்:
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடம் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர். லிஃப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்ற போது, லிஃப்ட் பழுதாகி வழியில் நின்றது.

வண்டலூர்: உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் ஒப்பந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம். பூங்கா துணை இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை; விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணிகள் பாதிப்பு.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. இதில் 14 பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற தாணுமாலையன் சுவாமி கோயில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் துவங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்ட விவகாரம்.

வாலாஜாபாத்: ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் பணியிடை நீக்கம்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை:
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம மக்களே நடத்த வேண்டும் என வலியுறுத்தி அவனியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு: கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆலோசனை – மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர்.

தூத்துக்குடி: தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்.

நெய்வேலி: என்எல்சி கேன்டீனில் வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டுசுரங்க தொழிலாளர்கள் 22 பேருக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி.

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 30க்கும் மேற்பட்ட பன்றிகள். பன்றிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி – வனத்துறையினர் அதிர்ச்சி.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை. இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது மாவட்ட சிறப்பு நீதிமன்றம்.

டாஸ்மாக்: பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை.

வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த, உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.-உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டிபுரம் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட இதர திட்டப்பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் பெருமாள் மற்றும் பணி பார்வையாளர்கள் 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருச்சி: ஆட்சியர் அலுவலகம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்கக் கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் கோவிந்தன் உட்பட 65 பேர் மீது செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலைய போலீஸ் வழக்கு.

கேரளா: பிரியாணியால் மீண்டும் ஒரு பலி. மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் மயங்கி விழுந்த பரிதாபம். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோட்டயத்தை சேர்ந்த செவிலியர் பலி.

கோவை: இளைஞரை தாக்கி காரை கடத்திய மர்ம நபர் காயங்களுடன் காரில் இருந்து குதித்து
தப்பிய இளைஞர். ஓ.எல்.எக்ஸி-ல் காரை விற்க முயன்றவருக்கு நேரிட்ட பயங்கரம்.

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி.மீது சிறுநீர் கழித்த விவகாரம். பாதிக்கப்பட்டவருக்கு முழு விமான கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்தது ஏர் இந்தியா நிறுவனம்.

டெல்லி: நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத அளவாக டெல்லியில் ஒரே மாதத்தில் 7,046 மின்சார வாகனங்கள் விற்பனை..

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு திடீர் நிறுத்தம். புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று காலை இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற இருந்தது. நேற்றிரவு ஆய்வு செய்த புதுக்கோட்டை கலெக்டர் தடுப்பு அரண்கள் சரியாக இல்லை என கூறி நிறுத்தி விட்டார். காளைகள், வீரர்கள் குவிந்திருந்த நிலையில் அனைவரும் ஏமாற்றத்துடன் அவரவர் ஊருக்கு திரும்பினர்.

உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிறுவனம் தகவல்.

வடசென்னை: அனல் மின் நிலையத்தில், 1வது நிலையின் 1வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

மத்திய பிரதேசம்: ரிவா மாவட்டத்தில் உள்ள கோயில் மீது விமானம் மோதிய விபத்தில் விமானி உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம்!