தஞ்சாவூர் : மத்திய அரசு ஹிந்தியை மட்டும் திணிக்கவில்லை, ஹிந்தி காரர்களையும் திணித்து வருகிறது. இதன் மூலம் இந்திக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ் மாநிலத்தை ஹிந்தி மாநிலமாக மாற்ற முயற்சி செய்கிறது. அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவரை அனுமதிப்பது அல்லது மறுப்பது தொடர்பாக உள் அனுமதி அதிகாரம் பெற வேண்டும். தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் 75 சதவீத விழுக்காடு வேலை தனியார் துறையில் தமிழர்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு பணியில் 95 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் பேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் பேட்டி.
________________________________________________________________________________
பெரம்பலூர் :
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்குப்பின் அக்குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி. கனிமங்களில் 2017 ஆம் ஆண்டு 7மாவட்டங்களில்56 குத்தகை குவாரிகளில் அனுமதிக்கப்பட்டஅளவை விட அதிக அளவு கிரானைட் எடுத்து செல்ல மாவட்ட அதிகாரிகள் அனுமதித்தன் காரணமாக அரசுக்கு சுமார் 380 கோடி வருவாய் இழப்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருவாய் இழப்பு பேன் மிக்சி கிரைண்டர் வழங்குவதில் தமிழ்நாடு முழுவதும் முறைகேடுகள்நடந்துள்ளன.பொருட்களை பாதுகாத்து வைப்பதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக சுமார் 14 கோடிரூபாய் இழப்பு.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 2014 ல்10300கோடிரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 185.21கோடி ஒதுக்கப்பட்டது.2015,2016 காலக்கட்டத்தில் தொகை சரியான முறையில் பயன்படுத்தாததால் 86 கோடியே26 லட்சம் தமிழ்நாடு அரசின் மக்கள் வரிப்பணம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு மாணவர்களுக்குபராமரிப்புக்காக அரசு ஒதுக்கிய சுமார் 21.5 கோடி மாநிலம் முழுவதும் வழங்கப்படாமல் அரசுகணக்கில் திருப்பிசெலுத்தப்பட்டுள்ளது. அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகுறித்த எவ்வித விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் 25கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளது.
________________________________________________________________________________
பட்டியலின சமுதாய மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை திரும்ப அனுப்பிய தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் ஹெச்.ராஜா தலைமையில் மனு அளித்த பாஜகவினர். அம்பேத்கரின் சிலையின் கையில் தாமரைப் பூவை வைத்து சென்ற பாஜகவினரால் பரபரப்பு. முரசொலி உள்ளிட்ட பஞ்சமி நிலம் மீட்புக்காக பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? வேங்கைவயல் விவகாரத்தில் திமுக கவுன்சிலருக்கு தொடர்பு என்பதால் திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை என குற்றச்சாட்டு. ஆர் எஸ்பாரதி பேசாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் என ஹெச்.ராஜா எச்சரிக்கை.
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான துணைத்திட்ட நிதியினை முறையாக பயன்படுத்தாமல் தமிழக அரசு திரும்பி அனுப்பியதோடு மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தியதாக கூறி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையில் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா தலைமையில் பாஜகவினர் கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அம்பேத்கர் சிலையிடம் கையில் வைத்ததோடு அம்பேத்கர் சிலையின் கையில் தாமரைப் பூவையும் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா :
தமிழக அரசு பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சமத்துவபுரம் கட்டியுள்ளார்கள், இதுவரை பட்டியல் இன சமூகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 10,446 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளனர். சமூக நீதிப் பாதுகாப்பு என கூறி பட்டியலின சமுதாய மக்களுக்கு சொல்லொனா துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறார்கள். அதனால் சட்டமேதை அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுத்துள்ளோம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி அடங்கிய பட்டியலை அம்பேத்கர் சிலையிடம் வழங்கியுள்ளோம் என்றார்.
திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதி செய்கிறது அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும், பட்டியல் இனத்தவர் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது பட்டியல் இனத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வைக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளன் திமுகவுடன் ஏன் இன்னும் இருக்கிறார் வெளியேறிவிடலாமே என கேள்வி எழுப்பினார்.
பட்டியலின சமூக மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இருந்தால் வேங்கை வயல் சம்பவத்தில் ஏன் திருமாவளவன் ஒரு நாள் கூட சென்று போராட்டத்தில் ஈடுபடவில்லை குற்றவாளிகளை கைது செய்யும் வரை நகர மாட்டேனென்று கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை ஏனென்றால் அந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.
திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீதான நலன் இல்லை என்பதை பட்டியலின சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்டியிலின சமூகத்தினரை ஆதிதிராவிடர் என்ற பெயர் தவறானது ஆதித்தமிழர் அல்லது சாம்பவர் என கூறுங்கள் என்றார். 1926 அரசாணையில் தெலுங்கு பேசுகிற ஹரிஜன மக்கள் ஆதி தெலுங்கர் என்றும் தமிழ் பேசக்கூடிய ஹரிஜன மக்கள் ஆதிதிராவிடர் என்றும் அழைக்கப்படுவார் என உள்ளது அதை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது.
________________________________________________________________________________
திமுக நிர்வாகியின் குடும்பத்தினரை வீடுதேடி சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக வட்டச் செயலாளரின் மகன் கைது – திமுக உட்கட்சி பூசலால் ஏற்பட்ட மோதல். சொந்த கட்சியினருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத திமுக அரசு.
மதுரை மாநகராட்சி 73 வது வார்டுக்கு உட்பட்ட முத்துப்பட்டி RMS காலனு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திமுகவுடைய பொறியாளர் அணியின் அமைப்பாளராக பதவியில் உள்ளார். இந்த நிலையில் 73 ஆவது வட்டச் செயலாளர் விஜயசேகர் மற்றும் அவருடைய மகன் விஜய்பாபு உள்ளிட்டோர் இடையே உட்கட்சி பூசல் இருந்து வந்தது.
மதுரை மாநகராட்சி மாமன்ற தேர்தலின்போது 73 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விஜயசேகர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அந்த வார்டு பகுதியானது காங்கிரஸுக்கு வழங்கப்பட்டு தற்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்துவருகிறார். இந்த நிலையில் 73 ஆவது வார்டு பகுதியை திமுகவிற்கு கொடுக்க விடாமல் காங்கிரசுக்கு கொடுக்க வைத்ததாக மணிகண்டன் மீது தொடர்ச்சியாக திமுக வட்டச் செயலாளர் விஜய்பாபு மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இதன் உச்சகட்டமாக நேற்று மாலை வீட்டில் குடும்பத்தினருடன் மணிகண்டன் இருந்தபோது திடீரென வீட்டிற்கு வந்த வட்டச் செயலாளர் மகன் விஜயபாபு மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக மணிகண்டனை தாக்கியுள்ளனர். அப்பொழுது மணிகண்டனின் குடும்பத்தினர் கதவை அடைத்து தப்பிக்க முயன்ற நிலையிலும் கதவை உடைத்து கொண்டு வட்டச் செயலாளரின் மகன் உள்ளிட்டோர் திமுக நிர்வாகியான மணிகண்டனின் குடும்பத்தினரை தாக்க முயற்சித்தனர்.
இதனையடுத்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க மணிகண்டன் அவரது மனைவியுடன் சென்றபோது வழிமறித்த திமுக வட்ட செயலாளரின் மகன் உள்ளிட்டோர் திமுக நிர்வாகியான மணிகண்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவருக்கு காயம் ஏற்படுத்தியதோடு அவரது பைக்கையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனையடுத்து சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து திமுக வட்டச் செயலாளரின் மகனான விஜய்பாபுவை கைது செய்ததோடு திமுக வட்டச் செயலாளர் விஜய சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக திமுக நிர்வாகியவே வீடு தேடி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவமானது திமுக அரசின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. சொந்த கட்சியினருக்கு சொந்த கட்சியினரால் அச்சுறுத்தல் நிலவும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலில் உள்ளதை தான் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
________________________________________________________________________________
திருச்சி : துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் மக்களின் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் துறையூர் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தங்கள் கோரிக்கையாக தமிழ்நாட்டின் பாரத ஸ்டேட் வங்கியின் மக்கள் பணத்தை அதானி என்ற கார்புரேட் நிறுவனத்திற்கு தாரை வார்த்த மோடி அரசை கண்டித்தும், மக்களின் நம்பிக்கை வழிகாட்டியாக விளங்கிய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்த மோடி அரசை கண்டித்தும், மக்களின் அன்றாட உணவு தேவைக்கு பயன்படுகின்ற கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து விலையேற்றம் செய்யும் மோடி அரசை கண்டித்தும் , விமான நிலையங்களை அனைத்தும் தனியாருக்கு தாரய் வார்க்கின்ற மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் முசிறி, மேட்டுப்பாளையம்,தொட்டியம் வட்டார பகுதியில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
________________________________________________________________________________
பொள்ளாச்சி : எரிவாயு விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடையில் கட்டி நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடெங்கும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்ப்யூட்டர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மத்திய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எரிவாயு மானியத்தை ஏழை எளியோர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்து உடன் அதை முழுமையாக ரத்து செய்து விட்டார்கள் மேலும் தற்போது வீட்டு எரிவாயின் விலை 1100 ரூபாய்க்கு மேல் சென்று விட்டது பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்ததாக கூறி வருடம் தோறும் உயர்ந்த விலையை பதாகைகளில் ஏந்தி எரிவாயு சிலிண்டர்க்கு பாடை கட்டி நாமம் இட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
________________________________________________________________________________
சேலம் : ஏற்காட்டில் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசிய டி எஸ் பி தையல் நாயகி சமிபத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியை அடுத்து ஏற்காட்டில் உள்ள காப்பி எஸ்டேட்கள் தங்கும் விடுதிகள் ஓட்டல்கள் போன்றவற்றில் வட மாநில தொழிலாளர்கள் அதிகபடியாக பணிபுரியுந்து வருகின்றனர்.
அவர்கள் எந்த அச்சமும் பட வேண்டாம் என்று இன்று சேலம் மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திதான் பரவுகிறது எனவே இது குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே காவல் நிலைய ஆய்வாளரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றார். மேலும் அவரது செல் எண் மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் செல் எண் ஆகியவை அவர்களிடம் கொடுக்கபபட்டது.
________________________________________________________________________________
Leave A Comment