வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு:
* டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி.
* வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் தலைவரின் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.
மதுரையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நடவடிக்கை:
விதிமீறிய ஆயிரத்து 50 வாகனங்களுக்கு ஒரே நாளில் 7 லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்த போலீசார் – நம்பர் ப்ளேட்களில், தலைவர்கள், நடிகர்கள் படங்கள் இடம்பெறக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நடவடிக்கை.
500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
TIDCO தொழிற்பூங்கா:
TIDCO மூலமாக தொழிற்பூங்கா அமைக்க அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் 3731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அன்னூரில் இருந்து கோவைக்கு நடை பயணம்.
கோவையில் விவசாயிகள் நடைபயணம்:
கோவை அன்னூரில் தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலியகுளம் விநாயகருக்கு மனு கொடுக்க நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகள்.
விஜய் ஆண்டனியின் ரத்தம் டீசர்:
விஜய் ஆண்டனிக்காக இணைந்த முன்னணி இயக்குனர்கள்.ரத்தம் டீசரில் வெற்றிமாறன் – வெங்கட் பிரபு – பா.ரஞ்சித் இடம்பெறுகின்றனர்.ரத்தம் டீசர் இன்று மாலை 5மணிக்கு வெளியாகிறது.
Leave A Comment