Tamilnadu

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா- சூரசம்ஹாரம் பொம்மைகள் தயார் .

Rate this post

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக பொம்மைகள் தயார் செய்யும் பணி மும்முரம்

பழனியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சூரர்களின் உருவ பொம்மைகளை செய்து வருகின்றனர். இவர்கள் உருவாக்கும் பொம்மைகள் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல் சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின் சூரர்களின் பொம்மைகள் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொம்மைகளை செய்தவர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்படும்.

Comment here